இந்த வருட ஐ.பி.எல் தொடரில் இந்த அணியை யாராலும் ஈஸியா தோக்கடிக்க முடியாது – சுனில் கவாஸ்கர் கருத்து

Sunil-gavaskar

2019ஆம் ஆண்டு மற்றும் 2020ஆம் ஆண்டு தொடர்ந்து 2 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்து வருகிறது என்றும், அதை மற்ற அணிகள் வீழ்த்துவது மிக மிக கடினம் என்றும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் சுனில் கவாஸ்கர் தனது கருத்தின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

mi

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்களான சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன், குர்னால் பாண்டியா மற்றும் ஹர்டிக் பண்டியா நல்ல பார்மில் உள்ளனர். குறிப்பாக சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷன் கிஷன் பயமே இல்லாமல் மிக அதிரடியாக ஆடி தங்களது முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து அனைவரையும் அசத்தினார்.

காயத்திலிருந்து மீண்டு வந்த ஹர்டிக் பாண்டியா பேட்டிங்கில் அசத்தியதோடு மட்டுமல்லாமல் பௌலிங்கிலும் இங்கிலாந்து தொடரில் அசத்தினார். டி20 தொடரில் மொத்தமாக 17 ஓவர்களை வீசி ஹர்திக் பாண்டியா மொத்தமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரது எக்கானமி ஆறு மட்டுமே , மேலும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 9 ஓவர்கள் வீசி வெறும் 48 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

sky

மேலும் பேசிய கவாஸ்கர் : மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களின் தற்போதைய ஃபார்ம் ரோஹித் சர்மாவுக்கு நன்கு கைகொடுக்கும். மற்ற அணிகள் மும்பை இந்தியன்ஸ் அணியை அவ்வளவு எளிதாக வீழ்த்தி விட முடியாது.மற்ற அணிகள் போராடி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த வேண்டியிருக்கும் என்றும் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

- Advertisement -

pandya 1

ஹர்திக் பாண்டியாவின் பவுலிங் குறித்து பேசிய சுனில் கவாஸ்கர் , ஹர்திக் பாண்டியா நன்றாக இதே பவுலிங்கை மேற்கொண்டால் நிச்சயமாக வருகிற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் அப்படி அவருக்கு இடம் கிடைத்தால் இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுப்பார் என்றும் கூறியுள்ளார்.