இந்திய பவுலரான இவரது பந்துவீச்சில் ஆஸி வீரர்கள் கஷ்டப்படுவார்கள் – கவாஸ்கர் ஓபன் டாக்

Gavaskar

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரை முடித்த கையோடு இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிக நீண்ட தொடரில் விளையாட உள்ளனர். அதற்காக ஆஸ்திரேலியா சென்றடைந்த வீரர்கள் 14 நாட்கள் தனிமைப் படுத்திக் கொண்டு வருகிற 27-ஆம் தேதி சிட்னியில் நடைபெறும் முதலாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க இருக்கிறார்கள்.

INDvsAUS

இந்நிலையில் தற்போது இந்த தொடர் குறித்து பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்களும், முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் இந்த தொடர் குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : எந்த ஒரு பேட்ஸ்மேனும் ஷார்ட் பாலுக்கு முன்கூட்டியே தயாராக இருக்க முடியாது. டாப் கிளாஸ் பேட்ஸ்மேன்களையும் ஆட்டம் காண செய்கின்ற பந்து வீச்சாளர்களின் ஒரே அஸ்திரம் என்றால் அது ஷார்ட் பால் தான். சரியான நேரத்தில் ஷார்ட் பாலை எதிர்கொள்ள என்று எந்த ஒரு பேட்ஸ்மேன்களும் தயாராக இருக்க முடியாது.

Shami

எனக்கு தெரிந்து இந்திய அணியின் சார்பில் முகமது சமி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக துல்லிய பவுன்சர் வீசிய மிரட்டுவார் என எதிர்பார்க்கிறேன். அவரது உயரத்தில் இருக்கும் பவுலர்கள் ஷார்ட் பால் வீசினால் அது தலைக்கும் தோள்பட்டைக்கும் இடையே செல்லும். அப்படி சென்றால் அது பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை கொடுக்கும்.

- Advertisement -

Shami

சமி தற்போது நல்ல லைனில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். தொடர்ந்து அதே லைனில் அவர் பந்து வீசினால் இழப்பு ஆஸ்திரேலிய அணிக்குத்தான் என அவர் கூறியுள்ளார். ஏற்கனவே இந்திய அணியில் சைனி, தீபக் சாஹர், உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, சிராஜ், நடராஜன் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.