ரோஹித் நீங்க செஞ்ச இந்த தப்புக்கு மன்னிப்பே கிடையாது – நேரடியாக கருத்தை தெரிவித்த கவாஸ்கர்

Gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் லாபுஷேன் அடித்த அபாரமான சதம் மூலம் 369 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனை தொடர்ந்து தற்போது முதல் இன்னிங்சில் விளையாடி வரும் இந்திய அணி மூன்றாம் நாள் இரண்டாவது செஷன் வரை 6 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் அடித்து உள்ளது. அடுத்தது விக்கெட்டுகளை இழந்தாலும் தற்போது சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

gill 2

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் மற்றும் கில் ஆகியோர் களம் இறங்கினார்கள். கில் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேற மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஆஸ்திரேலிய தரப்பிற்கு எதிராக அபாரமாக விளையாடி 43 ரன்களை கடந்தபோது அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சுழற்பந்து வீச்சாளரான லயன் வீசிய பந்தை தூக்கி அடிக்க ஆசைப்பட்டு ரோகித் 44 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 74 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரிகளுடன் 44 ரன்களை குவித்தார். நிதானமாக விளையாடி அரைசதம் கடப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சிக்சர் அடிக்க முற்பட்டு ஆட்டம் இழந்ததால் இந்த விக்கெட் குறித்து தற்போது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

rohith

இந்த விக்கெட்டுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் தன் கருத்தினை தெரிவித்துள்ளார். குறித்து அவர் கூறுகையில் : ஏன் ? ஏன் ? ஏன் ? அந்த ஷாட்டை எதற்காக அடிச்சிங்க தேவையில்லாத ஷாட். லாங் ஆன் திசையில் பீல்டர் இருப்பது தெரிந்தும் அங்கு பந்தை ஏன் தூக்கி அடிக்க வேண்டும். சில பந்துகளுக்கு முன்னர் தான் நீங்கள் பவுண்டரி அடித்து இருந்தீர்கள். அதன் பின்பு இந்த ஷாட்டை ஏன் அடிக்க வேண்டும், இதற்கு மன்னிப்பே கிடையாது.

rohith 1

குறிப்பாக இந்த ஷாட்டுக்கு மன்னிப்பு கொடுக்க முடியாது. எவ்வளவு சுலபமாக மிகப்பெரிய விக்கெட்டை வீழ்த்தி விட்டனர். டெஸ்ட் மேட்சில் சிறப்பாக துவங்குவது முக்கியமல்ல சிறப்பாக முடிக்க வேண்டும் அதுதான் முக்கியம் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக ரோஹித்தின் ரசிகர்கள் ரோகித் அதிரடி ஆட்டக்காரர் என்பது நாம் அறிந்தது அவர் அதிரடியாக விளையாடி சிக்சர் அடித்து அரைசதம் கடக்கவே முயற்சித்தார். இதில் என்ன தவறு இருக்கிறது என்று அவருக்கு சப்போர்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement