இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற டி20 தொடரை இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி பழிதீர்த்துக் கொண்டது. இந்நிலையில் தற்போது நடைபெற இருக்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இவ்விரு அணிகளும் ஒரு கௌரவ தொடராக பார்க்கிறது. மேலும் கடந்த முறை டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி இருந்ததால் இம்முறை ஆஸ்திரேலிய அணி இந்திய அணியிடம் இருந்து அந்த டெஸ்ட் தொடரை கைப்பற்ற ஆர்வம் காட்டும் என்று தெரிகிறது.
இந்த தொடரின் முதல் போட்டி 17ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு பின்னர் விராட் கோலி தனது குழந்தையின் பிறப்புக்காக நாடு திரும்புகிறார். அதனால் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் இந்திய அணியின் முன்னணி வீரரான ரஹானே கேப்டனாக செயல்படுவார் என்று ஒரு உறுதியான தகவல் பரவலாக வெளியாகி உள்ளது. அந்த தகவல் ஓரளவுக்கு உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் ரஹானே கேப்டன் பதவி நெருக்கடியால் தடுமாற வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் கருதுகின்றனர். ஆனால் ஏற்கனவே கேப்டன் பதவியில் ரஹானே ஓரளவு சிறப்பாக செயல்பட்டு உள்ளதாகவும், சில வெற்றிகளை ருசித்து உள்ளதாகவும் அதனால் ரஹானேவிற்கு எந்தவித நெருக்கடியும் இல்லை என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :
கேப்டன் பதவி ரஹானேவிற்கு எப்போதும் உண்மையிலேயே நெருக்கடி இல்லை. ஏனென்றால் இரண்டு முறை அதாவது இரண்டு போட்டிகளில் ரஹானே அணியை வழிநடத்தி வெற்றி கண்டுள்ளார். அதுமட்டுமின்றி ஒருமுறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தர்மசாலாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் காரணமாக அவர் கேப்டன் பதவியில் அழுத்தத்தை உணர மாட்டார் மேலும் கேப்டன் பதவியை பொறுத்தவரைக்கும் அவருக்கு நெருக்கடி கிடையாது. ஏனென்றால் மூன்று போட்டியிலும் கேப்டன் பொறுப்பு இருக்கும் என்பது அவருக்கு தெரியும். ஆகையால் அந்த பதவியை சிந்தனை செய்து சிறப்பாக நடந்து செல்வார் என்று நான் நினைப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.