ரஹானே இந்த விஷயத்துல செம ஸ்ட்ராங். இதுல பயப்பட ஒன்னும் இல்ல – கவாஸ்கர் ஆதரவு

Gavaskar
- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4 டெஸ்ட் தொடரில் முதல் போட்டி நாளை அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் காலை 9.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த முதல் டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாகவும் பிங்க் நிற பந்தில் விளையாடி போவதாகவும் அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி தற்போது இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் விடைப்பெறுவதாக கூறியுள்ளார். விராட் கோலிக்கு குழந்தை பிறக்க இருப்பதால், கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இருக்க மாட்டார்.

Ind-lose

- Advertisement -

ஒரு நாள் மட்டும் டி20 தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி கடைசி 3 டெஸ்ட் போட்டியில் இடம்பெறாதது இந்திய அணிக்கு மாபெரும் இழப்பாக கருதப்படுகிறது. இதனால் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் பல குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளது. அடுத்த 3 போட்டிக்கு யார் கேப்டன் ? யார் தொடக்க வீரர் ? யார் விக்கெட் கீப்பர் ? என பல்வேறு குழப்பங்கள் இந்திய அணியில் நிலவி வருகிறது.

இந்நிலையில், விராட் கோலிக்கு பதிலாக கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரகானே தான் கேப்டனாக செயல்படுவதாக கருதப்படுகிறது. இதுகுறித்து தற்போது இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில் “ரகானேவிற்கு விராட் கோலியின் கேப்டன்ஷிப் பொறுப்பு அழுத்தமாக இருக்காது. இவர் கேப்டனாக இருந்தபோது இந்திய அணி இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ind-2

ரகானே தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதனால்தான் ரகானேவிற்கு கேப்டன்ஷிப் பொறுப்பு அழுத்தமாக இருக்காதென்றேன். இவர் கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் என இரு துறைகளிலும் சிறப்பாக செயல்படுவார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அவர் களத்தில் புஜாராவுடன் இணைந்து ஆஸ்திரேலிய அணிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் விளையாடுவார்.

Rahane 1

இவருடைய பேட்டிங் கடந்த இரண்டு வருடங்களில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. இவர் பந்தை எதிர்கொள்ளும் முறை சிறப்பாக இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவருடைய பேட்டிங் அற்புதமாக இருக்கும். இவர் மனதளவில் வலிமையானவர்” என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

Advertisement