இந்திய வீரர்கள் தாக்கப்பட வாய்ப்பு. கவனமாக இருங்கள் – கவாஸ்கர் கூறிய எச்சரிக்கை

Gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ரசிகர் ஒருவர் மைதான பாதுகாப்பை மீறி உள்ளே ஓடிவந்து ரோகித் சர்மாவின் காலில் விழுந்தார். அதனை கவனிக்காத ரோகித் சர்மா ரசிகரை தடுக்கும் போது அவர்மீது தவறி விழுந்தார்.

Rohith-fan

- Advertisement -

போட்டி நடக்கும்போது இப்படி ரசிகர்கள் மைதானத்திற்குள் வருவது இந்தியாவில் இது தொடர்கதையாகி வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த சுனில் கவாஸ்கர் கூறியதாவது : மைதானத்தில் நுழைய முடியாதபடி தடுப்புகள் ஏராளமாக இருந்தாலும் அதையும் மீறி ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளே வருகிறார்கள். ஆனால் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருக்கும் பாதுகாவலர்கள் கூட்டத்தை கவனிப்பதை விடுத்து ஆட்டத்தை பார்ப்பதால்தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.

இந்தியாவில் இது தீராத பிரச்சினையாக இருக்கிறது. மேலும் போட்டியை இலவசமாக பார்ப்பதற்கு பாதுகாவலர்கள் நியமிக்கப்படவில்லை. ரசிகர்கள் இது போன்ற அத்துமீறி நுழைவதை தடுக்க தான் அவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இதுபோன்று உள்ளே நுழையும் ரசிகர்களால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

rohith fan 2

யார் வேண்டுமானாலும் ரசிகர் என்று சொல்லி உள்ளே நுழைந்து வீரர்களுக்கு சேதத்தை உருவாக்கலாம். இதற்கு முன் ஏற்கனவே இதனைப் போன்று அசம்பாவிதங்கள் நடந்து உள்ளது. அதனால் வீரர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மேலும் மைதான பாதுகாப்பாளர்கள் கவனமாக ரசிகர்களை அத்துமீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கவாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement