இனிமேல்தான் இவர் உஷாராக இருக்கவேண்டும். இளம்வீரரை எச்சரித்த – சுனில் கவாஸ்கர்

Sunil-gavaskar
- Advertisement -

இந்திய அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இதனை தொடர்ந்து வரும் 22ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணிக்கு மட்டுமின்றி பங்களாதேஷ் அணிக்கும் இதுவே முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கிரிக்கெட் லைவ் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்ட சுனில் கவாஸ்கர் இந்திய அணியின் துவக்க வீரர்களான மயங்க் அகர்வாலை புகழ்ந்து பேசினார். அகர்வால் இனிமேல் எச்சரிக்கையாக விளையாட வேண்டும் ஏனெனில் எதிரணியினர் அவரது பேட்டிங் உத்திகளை கவனிக்கத் தொடங்கி விட்டார்கள். எனவே அவருக்கு எதிரான உத்திகளை அவர்கள் யோசிக்கத் தொடங்கிவிடுவார்கள். மேலும் அவருக்கு எதிராக கடுமையான பந்து வீச்சையும் அவர்கள் தொடுக்க இருப்பார்கள்.

டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அவர் மகிழ்ச்சியுடன் ஆடிவருகிறார். அவருக்கு இதுதான் முதல் வருடம் இனி வரும் ஆண்டுகளிலும் அவர் இதே போல விளையாட விரும்புகிறேன். அவரது பேட்டிங் முறைகள் அனைத்தும் இப்போது பிரமாதமாக இருக்கிறது. அவர் நன்றாக தன்னம்பிக்கையுடன் ஆடுகிறார். எனவே இனிவரும் போட்டிகளிலும் பந்துவீச்சாளர் எதிர்த்து ஆட வேண்டிய முக்கியமான பணி அவரிடம் உள்ளது. எனவே இனி முன்பைவிட கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம் என்று கவாஸ்கர் கூறினார்.

Advertisement