கோலியோட நிலைமை சரியாகணுனா இவரோட அட்வைஸ் அவசியம் – சுனில் கவாஸ்கர்

Gavaskar
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சதம் அடிக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் தான் அறிமுகமான காலத்திலிருந்து தொடர்ச்சியாக சதங்களை அடித்து பழக்கப்பட்ட விராட் கோலி தற்போது 50 இன்னிங்ஸ்களாக சதம் அடிக்காமல் விளையாடி வருகிறார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ரசிகர்களும் விராட் கோலி எப்போது சதம் அடிப்பார் ? எப்போது சதம் அடிப்பார் ? என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இவ்வேளையில் இந்த இங்கிலாந்து தொடரில் விராட் கோலி நிச்சயம் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இந்த தொடரிலும் முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏமாற்றம் அளித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதுமட்டுமின்றி இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சனின் பந்துவீச்சில் மீண்டும் அவர் மிகவும் திணறி வருகிறார். இந்நிலையில் விராட் கோலியின் மீது உள்ள இந்த பார்ம் அவுட் விமர்சனம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

kohli 1

இங்கிலாந்து அணிக்கு எதிராக குறிப்பாக ஆண்டர்சனுக்கு எதிராக விராட் கோலி மிகவும் திணறி வருகிறார். இந்த பிரச்சினையை தீர்க்க விராட் கோலி சச்சின் டெண்டுல்கரை தொடர்பு கொள்ள வேண்டும். டெண்டுல்கரை அணுகி அவர் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அதன்படி விளையாட வேண்டும்.

ஏனெனில் 2014ஆம் ஆண்டு கோலிக்கு ஏற்பட்ட சரிவு போல் இம்முறை நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக சச்சின் கொடுக்கும் அறிவுரைகள் நிச்சயம் அவரது பார்மை மீட்டெடுக்க உதவும் என கவாஸ்கர் விராட் கோலிக்கு ஆலோசனை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement