இவரின் வருகையால் ஜடேஜாவின் இடத்திற்கு ஏற்பட்ட ஆபத்து – சுனில் கவாஸ்கர் கிண்டல்

Gavaskar

கட்டை விரல் காயம் காரணமாக ஜடேஜா ஓய்வு எடுக்கச் சென்ற வேளையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அக்ஷர் பட்டேல் மற்றும் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட வாய்ப்பை இருவரும் சரியாக பயன்படுத்திக் கொண்டனர். அதிலும் குறிப்பாக அக்சர் பட்டேல் பட்டையை கிளப்பியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகளில் விளையாடியுள்ள அக்சர் பட்டேல் மொத்தமாக 27 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதில் 4 முறை 5 விக்கெட் ஹால் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.

axar

அக்ஷர் பட்டேலின் பந்துகளை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மேற்கொள்ள மிகவும் சிரமப்பட்டனர் என்றுதான் கூறவேண்டும். தொடக்க தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்களில் திலிப் தோஷி 27 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தில் இருந்தார். இப்பொழுது அக்ஷர் பட்டேலும் தனது முதல் தொடக்க தொடரில் 27 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனையை சமன் செய்துள்ளார்.

தனக்கு வந்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு பட்டையை கிளப்பியுள்ள அக்ஷர் பட்டேல் இந்திய ரசிகர்கள் மத்தியில் நற்பெயரை பெற்றுக்கொண்டார். இந்நிலையில் ஜடேஜா காயத்திலிருந்து மீண்டு வந்தால் அவருக்கு இடம் அளிக்கப்படுமா என்று டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

jadeja 1

அதற்கு பதில் சொல்லும் விதமாக சுனில் கவாஸ்கர் , அக்ஷர் பட்டேல் இந்த ஆட்டத்தை ஒருவேளை ஜடேஜா பார்த்திருந்தால் தனது காயம் சரியாகி விட்டதா என்று மருத்துவரிடம் வேகமாக சென்று கேட்டு இருந்திருப்பார். அவருக்கு அடிபட்டது ஜனவரி 10 தற்பொழுது மார்ச் 10 வர இருக்கிறது , இன்னுமா அவருக்கு காயம் சரியாகவில்லை என்று நக்கலாக பதில் கூறியுள்ளார்.

- Advertisement -

Jadeja

இந்த நிலையில் வருகிற 12-ஆம் தேதி நடைபெற உள்ள டி20 தொடரில் சுந்தரும், பட்டேலும் இடம் பெற்று உள்ளனர். ஆனால் அதில் ரவீந்தர ஜடேஜாவின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அக்சர் படேலின் வருகையால் ஜடேஜாவின் இடத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் உலா வருவது குறிப்பிடத்தக்கது.