ஹார்டிக் பாண்டியாவிற்கு பதிலாக இவங்க 2 பேருக்கு வாய்ப்பு கொடுங்க – கவாஸ்கர் ஓபன்டாக்

Gavaskar
- Advertisement -

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஆன ஹார்டிக் பாண்டியா 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் இருந்து முதுகுவலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். மேலும் இதற்காக லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட பாண்டியா அதன்பிறகு கடந்த சில ஆண்டுகளாகவே பந்து வீசாமல் இருந்தார். இருப்பினும் அவரது பேட்டிங்கில் உள்ள அதிரடி காரணமாக ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு முழு நேர பேட்ஸ்மேனாக செயல்பட்டு வந்தார்.

Pandya

- Advertisement -

அது மட்டுமன்றி இந்திய அணியிலும் தற்போது பினிஷிங் ரோலில் இறங்கிவரும் பாண்டியா பந்து வீசவில்லை என்றால் அணியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்ற காரணத்திற்காகவே தற்போது மெல்ல மெல்ல பந்து வீசி வருகிறார். இருப்பினும் முன்பு போன்று அவருடைய ஆட்டத்தில் பழைய அதிரடி மற்றும் உத்வேகம் ஆகியவை இல்லை. இருப்பினும் அவரது திறமை மீது உள்ள நம்பிக்கையின் காரணமாக இந்திய அணி தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

தற்போது இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியிலும் ஆல்-ரவுண்டராக இடம்பெற்றுள்ள ஹர்டிக் பண்டியா ஒருநாள் தொடரில் படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதனை தொடர்ந்து டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் டி20 போட்டியில் அவர் மீண்டும் தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

pandya 1

இந்நிலையில் அவரின் இந்த மோசமான பார்ம் குறித்து பேசிய கவாஸ்கர் கூறுகையில் : பாண்டியாவிற்கு பதிலாக நாம் மாற்று வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஒரு வீரரை மட்டும் இப்போது எப்போதும் உற்றுநோக்கி கொண்டிருக்கிறோம் அவருக்கே தொடர்ச்சியான வாய்ப்புகளை கொடுத்திருக்கின்றோம். அதனால் படுமோசமாக ஒரு வீரர் செயல்படும்போது அவருக்கு பதிலாக மற்ற வீரர்களை முயற்சி செய்வது நல்லது. மீண்டும் மீண்டும் ஒருவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருவது தவறானது என்று கூறியுள்ளார்.

deepak 1

மேலும் ஹார்டிக் பாண்டியாவிற்கு பதிலாக கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே நாம் மாற்று வீரரை தயார் படுத்தவில்லை. தீபக் சாஹர் இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடி உள்ளார் அவரால் பேட்டிங் செய்ய முடிகிறது. அதேபோன்று புவனேஸ்வர் குமார் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 அரை சதங்களை விளாசி இருக்கிறார். எனவே பாண்டியாவிற்க்கு பதிலாக தற்போது மாற்று வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை நாம் தான் கண்டுபிடிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்திய அணியின் அதிகாரி ஒருவர் ஷர்துல் தாகூரை வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக மாற்ற முடியும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement