எல்லா வசதிகளும் இருந்தாலும் தோனி விமானத்தின் இந்த இடத்தில தான் அமர்வாராம் – கவாஸ்கர் வெளியிட்ட தகவல்

Gavaskar
- Advertisement -

தோனி பற்றிய ஆச்சரியமான, மிக எளிமையான ஒரு விஷயத்தை வெளியே கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர். இந்தியாவில் உள்நாட்டு தொடர் நடக்கும்போது அணி வீரர்கள், மேலாளர்கள், அணி உறுப்பினர்கள் மற்றும் குறிப்பிட்ட தொலைக்காட்சியில் வேலை செய்யும் டெக்னீஷியன்கள் என அனைவருக்கும் தனியாக ஒரு விமானத்தை பிசிசிஐ ஏற்பாடு செய்வது வழக்கம்.

Dhoni

- Advertisement -

உள்நாட்டிலேயே செல்வதற்காக இந்த விமானத்தை பிசிசிஐ ஏற்பாடு செய்யும். அதில் பிசினஸ் கிளாஸ் மற்றும் எக்கனாமிக்ஸ் கிளாஸ் என இரண்டு பிரிவுகள் இருக்கும் . பிசினஸ் கிளாஸ் அறையில் சற்று வசதிகள் அதிகம். இந்திய அணியின் கேப்டன், மேலாளர், பயிற்சியாளர், நட்சத்திர வீரர்கள் ஆகியவர்களுக்கு மட்டுமே இந்த பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் கொடுக்கப்படுவது வழக்கம்.

ஆனால் இந்திய அணியின் வீரராக இருந்த காலத்திலும் சரி, கேப்டனாக இருந்த காலத்திலும் சரி, தோனி பெரும்பாலும் அந்த இருக்கையை பயன்படுத்த மாட்டாராம். இது குறித்து சுனில் கவாஸ்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டதாவது : இந்தியாவின் உள்நாட்டு தொடர்களில் ஆடும்போது வேறு வேறு மாநிலத்திற்கு செல்வதற்காக ஒரு சிறப்பு தனி விமானம் இருக்கும்.

dhoni

இந்த விமானத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் அடுத்த போட்டியின் பளிபரப்பிற்க்காக கேமரா மற்றும் கேபிள் வயர் ஆகிய பல பொருட்களுடன் பயணம் செய்வார்கள். பிசினஸில் குறைந்த இடமே இருக்குமென்பதால் கேப்டன், பயிற்சியாளர் மற்றும் மேனேஜர் போன்ற முக்கியமான நபர்கள் மட்டுமே அதில் அமர்வார்கள். முந்தைய போட்டியில் சிறப்பாக ஆடிய வீரர்களுக்கும் இந்த இடத்தில் இடம் கிடைக்கும்.

- Advertisement -

இதில் ஆச்சரியம் என்னவென்றால் தோனி கேப்டனாக இருந்த போதும் சரி நட்சத்திர வீரராக இருந்த போதும் சரி இந்த இருக்கையை பயன்படுத்தவே மாட்டார். அவர் தொலைக்காட்சி குழுவின் இடத்தில் சென்று அமர்ந்து கொள்வார் அவர்களுடன் நிறைய உரையாடுவார் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வார் இவ்வாறு கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

Dhoni

தோனி இயல்பாகவே எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர். அனைவரையும் மதிக்கும் பழக்கம் கொண்டவர். இதனை சமீபத்திய பல நிகழ்வுகளில் நாம் பார்த்திருப்போம். இந்த விடயங்களின் மூலம் தோனியின் எளிமையினை அவர் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement