தவான் என்ன செய்து கொண்டிருக்கிறார். அவர் யோசிக்க வேண்டும் – கவாஸ்கர் கருத்து

Gavaskar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் சமீபத்தில் காயமடைந்து மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளார். எனினும் காயத்தில் இருந்து மீண்ட அவர் சரியாக ரன் குவிக்கவில்லை. தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்ற அவர் 36 மற்றும் 40 ரன்கள் அடித்திருந்தார்.

dhawan 1

- Advertisement -

அத்துடன் தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிக ரன்கள் இந்திய அணி சார்பாக இவர் அடித்து இருந்தாலும் 42 பந்துகளில் 41 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். இந்நிலையில் இந்த ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவிக்கையில் : காயத்திலிருந்து மீண்டு வந்த தவான் தற்போது பார்முக்கு திரும்பவில்லை அவர் ஆட்டத்தின் மீது கேள்வி எழுப்பப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் அடுத்த இரண்டு டி20 போட்டிகளில் அவர் விளையாடும் இதம் அடிப்படையில் சரியாக விளையாடவில்லை என்றால் டி20 போட்டிகளில் அவர் மீது கேள்வி எழுப்பலாம். ஏனென்றால் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 40 முதல் 45 ரன்களை அடிக்கும் அவர் அதே அளவிலான பந்துகளில் அந்த ரன்களை அடித்தால் அதில் எந்தவிதமான நன்மையும் அணிக்கு இருக்காது. எனவே ஷிகார் தவான் இதைக் குறித்து யோசிக்க வேண்டும். காயத்திலிருந்து மீண்டு வரும் வீரர்கள் பார்முக்கு வர சில நாட்கள் ஆகும்.

dhawan

எனவே மேலும் இந்த சிக்கலைத் தவிர்க்க அவருக்கு பதிலாக மாற்றுவழியை நாம் யோசித்து தான் ஆக வேண்டும் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்திய அணி டி20 தரவரிசை பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய நடைபெற உள்ள டி20 போட்டியில் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டுமென்றால் அதற்கு முன்பு நடைபெறும் டி20 போட்டியில் சிலவற்றில் வெற்றி பெற்றால்தான் இந்திய அணி தரவரிசையில் முன்னேற்றம் அடையும் என்றும் சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement