4 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிச்சயம் இந்த வரலாற்றை மாற்றி அமைக்கும் – கவாஸ்கர் நம்பிக்கை

Gavaskar

இந்தியா அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரில் இந்திய அணியும் வெற்றி பெற்றிருந்தனர். டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற இரண்டாவது போட்டியில் இந்திய அணி பதிலடி கொடுத்து வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் டிரா ஆனது குறிப்பாக இந்திய வீரர்கள் கடைசி 2 நாளில் 131 ஓவர் விளையாடி செய்தனர்.

ashwin 1

இந்த அடுத்து பிரிஸ்பேன் மைதானத்தில் நடக்கவுள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஆட்டத்தை அனைவரும் வாய்நிறைய புகழ்ந்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பேசியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். “கஃபா” மைதானத்தில் வீழ்த்த முடியாத ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி நிச்சயம் வீழ்த்தும். அங்கு ஆஸ்திரேலிய அணி வீழ்த்த முடியாத அணியாக இருக்கலாம். ஆனால் அந்த வரலாற்றை இந்திய அணியை மாற்றியமைக்கும்.

ரகானே தலைமையிலான இந்திய அணி இதனை செய்ய முடியும். இந்திய அணி தொடரை வென்றால் அது வரலாற்று சிறப்புமிக்க தொடராக அமையும் என்று தெரிவித்திருக்கிறார் சுனில் கவாஸ்கர்.

Saini 1

கடந்த 1988 முதல் இந்த மைதானத்தில் 28 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை வெற்றி இருக்கிறது. இந்தியா இந்த மைதானத்தில் தொடர்ந்து தோல்விகளை தான் சந்தித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் 2018 ஆம் ஆண்டு விராட்கோலி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது ..

- Advertisement -

Gill

இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது அனைவரின் எதிர்பார்ப்பையும் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக ஒரு போட்டியில் வென்று விட்டதால் இந்திய அணியால் தொடர்ந்து அங்கு வென்று தொடரை கைப்பற்ற முடியும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் இந்திய ரசிகர்களும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.