இந்திய அணியில் இவர்கள் இருவர் இல்லாதது பெரும் இழப்பு தான். 2 பேரையும் டீம் மிஸ் பண்ணும் – கவாஸ்கர் கருத்து

Sunil-gavaskar
Advertisement

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நாளை முதல் துவங்க உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 9 10 மணிக்கு துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

INDvsAUS

இந்த ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான மூன்று விதமான இந்திய அணிகளும் ஆஸ்திரேலியா சென்று தற்போது விளையாட தயாராகி விட்டன. ஆனால் ஐபிஎல் தொடரில் அடைந்த காயம் காரணமாக இந்திய அணியின் முன்னணி தொடக்க வீரரான ரோகித் சர்மா இந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவில்லை. மேலும் காயம் முழுமையாக குணமடைந்த நிலையில் டெஸ்ட் போட்டிக்கான அணியில் மட்டும் எடுக்கப்பட்டிருந்த ரோஹித் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

அதேபோல இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் வீரரான இசாந்த் சர்மாவும் ஐபிஎல்லில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வீரர்களையும் இந்திய அணி பெரிதாக இழக்கும் என்று பல்வேறு கிரிக்கெட் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்த இரண்டு வீரர்கள் குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Ishanth

இதுகுறித்து அவர் கூறும்போது : இந்திய அணி நிச்சயம் இந்த இரண்டு சர்மாக்களையும் மிஸ் பண்ணும். இஷாந்த் ஷர்மா ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவது இல்லை ஆனால் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு மிகப்பெரிய வீரர். அனைத்து விதமான போட்டிகளிலும் இந்திய அணிக்கு துவக்க வீரராக ரோகித் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது இழப்பு நிச்சயம் இந்திய அணிக்கு ஒரு பெரிய பின்னடைவுதான்.

Rohith

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தனது அபாரமான துவக்கத்தை அமைத்துக் கொடுக்க கூடிய ரோகித் சர்மா கடந்த ஆண்டிலிருந்து டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டு அவர் இந்த தொடரில் விளையாடாதது இந்திய அணிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement