இந்திய வீரரான இவர் பேட்டிங் ஸ்டைலை மாற்றி ஆகவேண்டும் – சுனில் கவாஸ்கர் ஆலோசனை

Gavaskar

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மாயங்க் அகர்வால் தனது பேட்டிங்கில் சொதப்பியுள்ளார். இவரது தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள மாயங்க் அகர்வால் திணறி வருகிறார். இந்திய அணியின் தொடக்க வீரரான மாயங்க் அகர்வால் 4 இன்னிஸ்சில் மொத்தமாகவே 31 ரன்கள் மட்டுமே குவித்து இருக்கிறார். அடிலெய்ட் மைதானத்தில் நடைப்பெற்ற முதல் இரண்டு இன்னிஸ்சில் 17, 9 என்ற ரன்களும், மெல்போர்ன் மைதானத்தில் நடைப்பெற்ற இன்னிஸ்சில் 0, 5 என்ற ரன்களும் மட்டுமே குவிக்க மாய்ங்க் அகர்வால் ஒருமுறை கூட 20க்கும் அதிகமான ரன்கள் குவிக்கவில்லை.

இந்திய அணியின் அனுபவ வீரரான இவரே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதல் டெஸ்ட் போட்டியில் பாட் கம்மின்ஸ் மற்றும் ஹாசில்வுட் ஆகியோர் பந்தில் மாய்ங்க் தனது விக்கெட்டை இழந்தார். ஆனால் இரண்டாவது டெஸ்டில் இரண்டு இன்னிஸ்சிலும் மிட்செல் ஸ்டார்கின் பந்திலயே விக்கெட்டை இழந்துள்ளார் அகர்வால். தற்போது ரோகித் சர்மா அணியில் இணைந்துள்ளதால் அகர்வாலுக்கு இது பிரச்சினையாக இருக்கும்.

ஒருவேளை சிட்னியில் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் அணியிலிருந்து வெளியேற்றப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இந்நிலையில், மாயங்க் அகர்வாலின் இந்த மோசமான பேட்டிங் குறித்து இந்திய முன்னாள் அனுப்பவ வீரர்களான சுனில் கவாஸ்கர் மற்றும் தீப் தாஸ்குப்தா கலந்துரையாடியுள்ளனர்.

Agarwal-1

முதலில் பேசிய சுனில் கவாஸ்கர் “அகர்வாலின் பதிய பேட்டிங் முறையானது ஆஸ்திரேலிய மைதானத்தில் விளையாடுவது மிகவும் கடினமாக இருக்கும். மேலும் இவரால் பேக்பூட் செய்ய கஸ்டமாக இருக்கும். மிட்செல் ஸ்டார்க்கின் பந்தை எதிர்கொள்ளும் போது அகர்வால் தனது முறையை சிறிது மாற்றி விளையாடவேண்டும். இது இடதுகை வேகப்பந்து வீச்சாளரை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்” என்றார்.

- Advertisement -

Agarwal

இவரை தொடர்ந்து பேசிய தீப் தாஸ்குப்தா “அகர்வால் தனது மணிக்கட்டை உடலுக்கு நெறுக்கமாக வைத்து விளையாடினால் பந்தை விரைவாக எதிர்கொள்ள சுலபமாக இருக்கும். இதுப்போன்று எனக்கும் ஒருமுறை நடந்திருக்கிறது. நான் இதைதான் பின்பற்றினேன். அகர்வால் இதை ஒருமுறை முயற்சி செய்து பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார் தாஸ்குப்தா.