இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய தற்போது தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டி குறித்து வர்ணனை செய்து வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் நேற்றைய வர்ணனையில் இந்திய அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதன் காரணம் யாதெனில் இந்திய அணியின் அனுபவ வீரரான அஷ்வின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார். தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் அஸ்வின் விரைவில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற பெருமையை வைத்துள்ளார்.
ஆனால் இவருக்கு வெஸ்ட்இண்டீஸ் தொடரின்போது அணியில் இடம் கிடைக்கவில்லை அது அப்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என அசத்தி உள்ள அவருக்கு இடம் கிடைக்கவில்லை. மேலும் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் இந்தியாவில் மட்டுமே அஸ்வின் பிரைம் ஸ்பின்னர் என்று இந்திய அணி நிர்வாகம் தெரிவித்தது. இதனை சாடிய கவாஸ்கர் அஸ்வின் எந்த நாட்டிலும் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய திறமை வாய்ந்த வீரர்.
வெளிநாடுகளிலும் அவர் சிறந்த பவுலர் தான் அவரது திறமை மிகப்பெரியது. அவர் ஒரு அபாரமான பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு ஆதரவாக இந்திய அணி நிர்வாகம் இருந்திருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு நடக்கவில்லை மேலும் டெஸ்ட் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடக்கூடிய ஒரு வீரர் அவருக்கு வாய்ப்பளிக்காமல் அவரை உட்கார வைப்பது மிகப் பெரிய தவறான விடயம் மேலும் இதுபோன்ற தவறு இனிமேலும் நடக்க கூடாது என்பதனை நான் கூறிக் கொள்கிறேன் என்பது போல கவாஸ்கர் வர்ணனை செய்தது குறிப்பிடத்தக்கது.