இப்படியே மோசமா ஆடுனா இனிமேல் இவர் இந்திய அணிக்கு விளையாடுவதை மறந்துட வேண்டியதுதான் – கவாஸ்கர் பேட்டி

Gavaskar

2021 ஐபிஎல் தொடரின் 16ஆவது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையில் நடைபெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி. இப்போட்டி முடிந்ததும் ஸ்டார் போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டியளித்த இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனின் சீரற்ற பேட்டிங் தன்மையை பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

Samson-1

சாம்சனைப் பற்றி அவர் குறிப்பிடும்போது, சஞ்சு சாம்சனின் சீரற்ற பேட்டிங் தன்மையின் காரணமாக் தான் அவர் இந்திய அணிக்கு தேர்வாவதில் சிரமப்படுகிறார். இது நான் சொல்லித்தான் மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லை, அவர் விளையாடுவதைப் பார்க்கும் அனைவருக்கும் அது நன்றாகவே தெரிந்திருக்கும் என்று கூறினார். மேலும் பேசிய அவர், சஞ்சு சாம்சனிடம் கிரிக்கெட்டில் அனைத்து விதமான ஷாட்களையும் ஆடும் திறமை இருக்கிறது.

ஆனால் அவர் தனது விக்கெட்டை எளிதாக பறிகொடுத்து விடுகிறார். ஒரு அணியின் கேப்டனாக பேட்டிங்கில் மற்ற வீரர்களை வழி நடத்திச் செல்ல தவறி விடுகிறார். மேலும் தொடரின் தொடக்கத்தில் ஒன்றிரண்டு போட்டிகளில் நன்றாக விளையாடும் அவர் அதனை தொடர் முழுவதும் வெளிப்படுத்துவதில்லை. இது ஒன்றும் சிறிய தூர ஓட்ட பந்தயம் கிடையாது, இது ஒரு மாரத்தான் போன்றது. எனவே இதற்கு சீரான பேட்டிங் விளையாடும் தன்மை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும் என்று கூறினார்.

Samson-1

இந்தத் தொடரிலும் தன்னுடைய முதல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக 119 ரன்கள் அடித்து அனைவரின் பாராட்டையும் பெற்ற சஞ்சு சாம்சன், பிறகு விளையாடிய மூன்று போட்டிகளிலும் சேர்த்து அடித்தது 26 ரன்கள் மட்டுமே. கடந்த 3 போட்டிகளில் அவரின் சராசரி 8.67. ஒவ்வொரு தொடரின் தொடக்கத்திலும் முதல் மூன்று போட்டிகளில் அதிரடியாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் சஞ்சு சம்சன் மற்ற போட்டிகளில் சோபிக்கத் தவறுகிறார் என்பது மறுக்க உண்மையாகும்.

- Advertisement -

samson

இப்படி சீரற்ற பேட்டிங்கை வெளிப்படுத்தினால் இந்திய அணிக்கு தேர்வாகும் கணவை சஞ்சு சாம்சன் மறந்துவிட வேண்டியதுதான் என்று ராஜஸ்தான் அணியின் ரசிகர்கள் வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.