யாரை கேட்டு மீண்டும் கோலியை கேப்டனாக போட்டீங்க – சுனில் கவாஸ்கர் விளாசல்

Gavaskar
- Advertisement -

இந்திய அணி நடந்து முடிந்த 50 ஓவர் உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்து ஏமாற்றத்தோடு வெளியேறியது. இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் மீதும், கேப்டன் விராட் கோலி கேப்டன்ஷிப் மேலும் கேள்வி எழுந்தது.

Kohli

மேலும் இந்திய அணி நாடு திரும்பியதும் உலக கோப்பை தோல்வி குறித்தும் விராட் கோலியின் கேப்டன்ஷிப் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய அணி நாடு திரும்பிய பின்னர் அப்படி ஒரு கூட்டம் நடக்கவில்லை. மேலும் இந்திய அணி அடுத்த தொடருக்கு அறிவிப்பு வெளியாகி இப்போது வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் சென்று விட்டனர்.

- Advertisement -

இந்நிலையில் மீண்டும் இந்திய அணியின் கேப்டனாக கோலியை நியமித்ததற்கு எதிராக சுனில் கவாஸ்கர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தற்போது உள்ள இந்திய அணியின் தேர்வுக்குழு நொண்டி வாத்தினைபோல் செயல்பட்டு வருகின்றனர். எப்படி அவர்கள் விராட் கோலியை மீண்டும் கேப்டனாக தேர்வு செய்தார்கள் ? என்று புரியவில்லை.

Kohli

உலக கோப்பை தொடரில் சரியாக விளையாடாத ஜாதவ் மற்றும் கார்த்திக் ஆகியோர் அணியில் இருந்து நீக்கிவிட்டனர். அதைப்போலவே சரியாக செயல்படாத கேப்டன் விராட் கோலியின் கேப்டன்ஷிப்பை அவர்கள் பறித்திருக்க வேண்டும். ஆனால் மீண்டும் கேப்டன் பதவியை ஆலோசிக்காமல் கோலிக்கு கண்மூடித்தனமாக வழங்கியுள்ளனர். இது தேர்வுக்குழுவினர் விருப்பமா அல்லது விராத் கோலியின் தனிப்பட்ட விருப்பமா ? என்ற கேள்வியும் எனக்கு எழுந்து உள்ளது.

Kohli

மேலும் இந்திய தேர்வுக்குழுவின் கடைசி அணி தெரிவு இதுவாக இருக்கும் ஏனென்றால் விரைவில் இந்திய அணிக்கு புதிய தேர்வுக் குழு அமைக்கப்பட வேண்டும். இனிமேல் அமைக்கும் குழுவானது அணிக்கு ஏற்றவாறு வீரர்களை தேர்வு செய்து விளையாட வைக்கும் என்று நம்புகிறேன் என்று கவாஸ்கர் தெரிவித்தார்.

Advertisement