கங்குலியை புகழ்ந்த கோலி. காண்டான கவாஸ்கர். கோலி திட்டித்தீர்த்து ஆதங்கம் – விவரம் இதோ

- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணியை இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Cup

- Advertisement -

அத்துடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் போட்டி முடிந்து பேட்டியளித்த கோலி இந்த ஈடன் கார்டன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு காரணம் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் காரணம் என்று புகழ்ந்தார். மேலும் இந்திய அணியின் இந்த வெற்றிப்பயணம் முன்னாள் கேப்டனான கங்குலியின் அணியிடம் இருந்துதான் கற்றுக் கொண்டோம் என்றும் கங்குலி துவங்கியதை நாங்கள் பின்பற்றி வருகிறோம் என்று கங்குலியின் புராணம் பாடினார் கோலி.

முழுவதும் கங்குலியை பற்றி புகழ்ந்து பேசிய கோலியின் இந்த பேட்டியை கேட்ட கவாஸ்கர் தற்போது கோலியை வெளிப்படையாக கடிந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : வங்கதேசத்திற்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது சிறப்பான ஒன்றுதான் அதே நேரத்தில் நான் இந்த விடயத்தில் ஒரு சிறு குறிப்பினை விளக்க உள்ளேன். அது யாதெனில் இந்திய கிரிக்கெட்டின் வெற்றிகளை துவங்கி வைத்தது கங்குலி தான் என்று கோலி கூறினார்.

Ganguly 1

ஆனால் அதனை நான் இகழவில்லை அவரை கௌரவப்படுத்த வேண்டும். ஆனால் இந்திய அணி 1970 – 80 களிலே இந்திய அணி வெற்றிகளை குவித்து உள்ளது அப்போதெல்லாம் கோலி பிறக்கவே இல்லை கோலி மட்டுமல்ல நிறைய பேர் 2000ம் ஆண்டில்தான் இந்திய கிரிக்கெட் வெற்றிப் பாதையில் நடைபோட துவங்கியதாக நினைக்கிறார்கள். ஆனால் 1970களில் இந்திய அணி வெளிநாடுகளில் வெற்றிகளை குவித்து உள்ளது.

gavaskar

மேலும் 80 களில் வெளிநாட்டு தொடரை வென்றுள்ளது மேலும் தொடரையும் ட்ரா செய்து உள்ளது அந்த கால கட்டத்தில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டு உள்ளோம் எனவே எப்போதும் தாதா தல என்று அவர் புகழ்ந்து கொண்டிருந்தால் நாங்கள் என்ன செய்தோம் என்பது போல அவர் கடுப்பான தனது கருத்தினை கவாஸ்கர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அதே காலகட்டத்தில் ஆயிரத்து 1983 ஆம் ஆண்டு இந்திய அணி 50 ஓவர் உலகக்கோப்பையை கைப்பற்றிய அணியிலும் கவாஸ்கர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement