கடந்த 10 ஆண்டுகளில் இவரே இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் – பாராட்டி தள்ளிய கவாஸ்கர்

Sunil-gavaskar
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த அணியாக வலம் வரும் இந்திய அணி தற்போது விராட் கோலியின் தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விராட் கோலி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என அனைத்து போட்டிகளிலும் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பல சாதனைகளை படைத்து வருகிறார். 2008ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் விராட் கோலி இந்திய அணிக்காக அறிமுகமானார். விராட் கோலி 251 ஒருநாள் போட்டி, 86 டெஸ்ட் போட்டி, 85 டி20 போட்டிகளில் விளையாடி 22000 ரன்களை குவித்திருக்கிறார்.

Kohli-2

- Advertisement -

அதிவேகமாக 12,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான சச்சினின் சாதனையும் முறியடித்துள்ளார் விராட் கோலி. இந்திய அணி வெற்றி பெற்ற போட்டிகளை எல்லாம் எடுத்துப்பார்த்தால் விராட் கோலியின் பங்கு பெரிதாக இருக்கிறது. இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிவடைந்த பின் ஐசிசி வெளியிட்ட ஒருநாள் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 870 புள்ளிகள் பெற்று மீண்டும் தனது முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

விராட் கோலி 2017ம் ஆண்டிலிருந்து தற்போது வரை ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விராட் கோலியின் ஒரு நாள் கிரிக்கெட் சாதனைகள் பற்றி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் “கடந்த 10 ஆண்டுகளில் ஒருநாள் போட்டியில் விராட் கோலி இந்திய அணியில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

Kohli

ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பானதாக இருக்கிறது. தற்போது ஐசிசி வெளியிட்ட ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலி தற்போது வரை ஒருநாள் போட்டிகளில் 43 சதங்களை அடித்துள்ளார். குறிப்பாக சேஸிங்கின் போது மட்டும் 26 சதங்களை விளாசியுள்ளார் விராட் கோலி. மேலும் இந்தச் சேஸிங்கின் மூலம் விராட் கோலியின் நிலையான ஆட்டமும் வெளிப்படுகிறது.

kohli 2

இந்திய அணியின் வெற்றிக்கு தனிநபராக இருந்து சிறப்பாக செயல்பட்டுள்ளார்” என்று சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். அதுமட்டுமின்றி கோலி எத்தனை சாதனைகளை படைத்திருந்தாலும் அவரது ரன் குவிக்கும் தாகம் குறையவில்லை என்பது நாம் அறிந்ததே.

Advertisement