இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இவர் மாறுவார். அதுல எந்த சந்தேகமும் இல்ல – கவாஸ்கர் கணிப்பு

Gavaskar
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரில் பல இந்திய இளம் கேப்டன்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர். அதிலும் குறிப்பாக முதல் முறையாக ஷ்ரேயாஸ் ஐயரின் காயத்தால் டெல்லி அணியின் கேப்டன் பதவியை ஏற்ற ரிஷப் பண்ட் தனது சிறப்பான செயல்கள் மூலம் கேப்டனாக வெற்றிகரமாக பயணத்தை துவங்கியுள்ளார். இந்த 14வது சீசனை தலைமை தாங்கி நடத்திய ரிஷப் பண்ட் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு டெல்லி அணியை முன்னேற்றி உள்ளார்.

- Advertisement -

ஒவ்வொரு போட்டியிலும் வீரர்களை சிறப்பாக ஊக்குவித்து வெற்றிக்கு அழைத்துச் சென்ற அவர் தனது நிதானத்தையும், பொறுமையை இழக்காமல் பேட்டிங்கிலும் தேவைப்படும்போது ரன்களை குவித்து அணிக்கு ஒரு நல்ல கேப்டனாக திகழ்ந்தார். இந்நிலையில் தற்போது ரிஷப் பண்டின் இந்த கேப்டன்சி குறித்து புகழ்ந்து பேசிய இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறுகையில் : இந்த ஐபிஎல் தொடரின் சில போட்டிகளின்போது ரிஷப் பண்ட் மிகவும் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்தார்.

பந்துவீச்சாளர்களை சரியான முறையில் பந்துவீசி செய்தது. பேட்டிங்கில் சிறப்பான இன்டன்ட் கொடுத்து வீரர்களை விளையாட வைத்தது என பலவற்றை அவர் செய்தார். இருப்பினும் ஒரு சில போட்டிகளில் பந்து வீச்சின் போது சில தவறுகளை அவர் செய்தாலும் அந்த பாடங்களில் இருந்து விரைவாக தவறுகளை கற்றுக்கொண்டார். இதனால் நிச்சயம் அவரால் சிறப்பான கேப்டனாக திகழ முடியும் அதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஏனெனில் தனக்கு கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தும் திறமை உள்ள வீரராக தற்போது மாறியுள்ளார்.

pant 2

மேலும் போட்டி அவரது கைக்கு வரும்போது அவருடைய பங்களிப்பு அதிகமாக தெரிகிறது. இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் பேட்டிங்கிலும் ஓரளவு சிறப்பாகவே அவர் செய்துள்ளார் என்று அவர் கூறினார். மேலும் டெல்லி அணிக்கு மட்டுமல்ல சர்வதேச அளவிலும் ரிஷப் பண்ட்டால் தலைமைதாங்கி அணியை வழிநடத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

pant

கடந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பணியிலிருந்து கழற்றி விடப்படும் நிலைக்கு சென்ற பண்ட் தனது கடின உழைப்பால் மீண்டுவந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்துள்ளார் மேலும் தான் இழந்த பார்மை சிறப்பாக மீட்டெடுத்த அவர் தொடர்ச்சியாக ரன்களைக் குவித்து வருவது அணிக்கு பலத்தை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement