மீதியுள்ள 3 போட்டிகளிலும் இந்திய அணிதான் ஜெயிக்கும். அதற்கு காரணம் இதுதான் – கவாஸ்கர் ஓபன்டாக்

Gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி மழை காரணமாக கடைசி நாளில் போட்டி நடைபெறாமல் போனதால் இந்திய அணி எளிதில் வெற்றி பெற வேண்டிய வாய்ப்பை தவற விட்டது. அதற்கு அடுத்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தற்போது இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

indvseng

- Advertisement -

இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றிக்கு பின்னர் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் இங்கிலாந்து அணியை விமர்சனம் செய்யும் வகையில் சற்று சுவாரஸ்யமான ஒரு பேட்டியை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இங்கிலாந்து அணியின் தூக்க வீரர்களின் டெக்னிக் மிகவும் வேடிக்கையாக இருந்தது. துவக்க வீரர் ஆட்டம் இழந்ததும் உள்ளே வந்த மூன்றாவது வீரரான ஹசிப் ஹமீத் தான் ஆட்டம் இழந்து விடுவோமோ என்ற பயத்தில் பதட்டமாகவே இருந்தார்.

அதேபோன்று அவர் ஆட்டம் இழந்ததும் ஜோ ரூட் பக்கம் கவனம் திரும்பியது. அவரது விக்கெட் விழுந்ததும் அணியின் மற்ற வீரர்கள் அடுத்து வரிசையாக நடையைக் கட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே அவரை நோக்கியே ஆட்டம் சென்றது. ஆனால் அவரும் ஆட்டமிழந்த போது இங்கிலாந்து அணி சரிவை சந்தித்தது. ஜானி பேர்ஸ்டோ போட்டி நன்றாக இருந்தால் சிறப்பாக விளையாடுகிறார். அதே இக்கட்டான வேளையில் இருந்தால் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

siraj 1

அதேபோல் மற்றொரு அதிரடி வீரரான பட்லர் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அபாரமான ஆட்டத்தை வெளிக்காட்டுகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இதுவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை அதே போன்று பந்துவீச்சை பொருத்தமட்டில் ஆண்டர்சன் மட்டுமே சிறப்பாக செயல்படுகிறார். அவரை தவிர புதுமுக பந்துவீச்சாளர் ராபின்சன் சிறப்பாக பந்து வீசுகிறார்.

மற்றபடி இங்கிலாந்து அணியில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு யாரும் சிறப்பாக விளையாடவில்லை. என்னை பொருத்தவரை ரூட், ஆண்டர்சன், ராபின்சன் ஆகிய வீரர்களை தவிர்த்து இங்கிலாந்து அணி ஒன்றும் இல்லை என்று தோன்றுகிறது. இதன் காரணமாக இந்திய அணிதான் மீதமுள்ள போட்டிகளிலும் வெற்றி பெறும் என கருதுவதாக கவாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement