விளையாடும் அளவிற்கு இவர் ஃபிட்டா இருந்தா உடனே ஆஸ்திரேலியா அனுப்புங்க ப்ளீஸ் – சுனில் கவாஸ்கர் கருத்து

Sunil-gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான நான்கு டெஸ்ட் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. 3ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் முடிவடைந்த நிலையில் கடந்த நவ்.17ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. பகலிரவு போட்டியாக நடந்த இந்த முதல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை பெற்றது. இதையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ashwin-1

- Advertisement -

இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் பாட் கம்மின்ஸ் வீசிய பந்தை எதிர்கொள்ள முடியாமல் முகமது சமி தவிர்த்து வர, அதில் ஒரு பவுன்சர் பந்தை எதிர்கொண்ட முகமது ஷமியின் கை மணிக்கட்டில் அடிபட்டது. இதனைத்தொடர்ந்து, முகமது ஷமியை பரிசோதித்த மருத்துவர்கள் மேற்கொண்ட ஸ்கேனில், எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் முகமது ஷமி மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை.

அதனால் அவருக்கு பதிலாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முஹமது சிராஜ் அல்லது நவ்தீப் சைனி ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோன்று ஷமிக்கு பதிலாக இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்படவும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் காயமடைந்த ஷமிக்கு பதிலாக இஷாந்த் சர்மாவை உடனடியாக ஆஸ்திரேலியா அனுப்ப வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Shami 2

இது குறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் “முகமது ஷமி காயம் அடைந்திருப்பது இந்திய அணிக்கு மாபெரும் இழப்பு. இவர் பவுன்சர்கள் மற்றும் யார்க்கர்களை வீசி எதிரணி வீரர்களை நிலைகுலைய வைப்பார். இவர் இந்திய அணிக்காக விக்கெட்களை பெற்று தருபவர். தற்போது முகமது ஷமி இல்லாத இந்திய அணியில் இஷாந்த் சர்மா பங்கு பெற்றால் இந்திய அணிக்கு மாபெரும் நம்பிக்கையாக இருக்கும்.

Ishanth

இஷாந்த் சர்மாவின் உடல்நிலை குணமடைந்து இருந்தால் உடனடியாக அவரை ஆஸ்திரேலியா அனுப்ப வேண்டும். இந்திய அணி இவரை எடுக்க வேண்டும், ஏனென்றால் நம்மிடம் சரியான பேக்கப் வீரர்கள் இருக்கிறார்கள், இருப்பினும் ஆஸ்திரேலிய வீரர்களின் விக்கெட்களை எடுக்கும் அளவிற்கு அவர்களிடம் திறமை இருக்கிறதா என்பது சந்தேகமாக இருக்கிறது” என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement