இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான தோனி இந்திய அணிக்காக 50 ஓவர் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி என அனைத்து வகையான ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்தவர் . தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு கடந்த சில ஆண்டுகளாக கோலியின் கேப்டன்சியில் இந்திய அணியில் விளையாடி வருகிறார்.
கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக் கோப்பையுடன் விடை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தோனி இன்னும் ஓய்வு அறிவிக்காமல் இந்தியனின் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். மேலும் கடந்த 8 மாதங்களாக அவர் விளையாடவில்லை என்பதால் வீரர்களின் ஊதிய ஒப்பந்த பட்டியல் இருந்தும் அவர் பெயர் நீக்கப்பட்டது.
இதன் பின்னர் அவர் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பது கடினம் என்று அனைவரும் கூறிவரும் நிலையில் தற்போது தோனி ஐபிஎல் தொடரில் விளையாடி இந்திய அணியில் இடம் பிடிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் ஐபிஎல் தொடர் தற்போது தள்ளிப் போய் உள்ளதால் அவரது நிலைமை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.’
மேலும் ரசிகர்கள் தோனி எப்போது இந்தியா அணிக்கு திரும்புவார் என்ற கேள்விகளை அழுத்தமாக இணையத்தில் கேட்டு வருகின்றனர். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் நிபுணர்கள் பலரும் தங்களது கருத்துகளை கூறிவருகின்றனர்.இந்நிலையில் தற்போது தோனி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறுகையில் :
தோனி டி20 உலக கோப்பைக்கான அணியில் இடம் பெற்று உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பம். மேலும் எனது விருப்பமும் அதுதான் அவர் இந்திய அணியில் விளையாடினால் நிச்சயம் இந்திய அணிக்கு அது பலம் தான். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் தற்போது நான் நினைக்கிறேன்.
மேலும் இந்திய அணி தோனியை தள்ளிவைத்து அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து விட்டது. மேலும் நிர்வாகமும் தோனி குறித்து பெரிதாக யோசிப்பதாக தெரியவில்லை. எனவே தோனி இந்த வருட டி20 உலக கோப்பையில் இடம்பெறுவது மிகவும் கடினமான ஒன்றுதான். தோனி தனது ஓய்வு அறிவிப்பை விளம்பரப் படுத்த மாட்டார். சத்தமில்லாமல் தனது அமைதியாக ஓய்வை அறிவித்து விடுவார் அதனால் அவரது ரசிகர்களுக்கு தான் இந்த விடயம் ஷாக்காக அமையும் என்றும் கவாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.