அடுத்த ஆண்டு டி20 உ.கோ தொடரில் தோனிக்கு பதில் இவர்தான் இருப்பார் – கவாஸ்கர் பேட்டி

Gavaskar
- Advertisement -

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது. அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரை கணக்கில் கொண்டு தற்போது இந்திய அணி வீரர்களை உருவாக்கி விளையாடி வருகிறது.

Dhoni

- Advertisement -

இந்திய அணியின் முக்கிய நோக்கம் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வெல்வது மட்டும்தான். இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :
அடுத்த வருடம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்ற வேண்டும்.

ஏனெனில் இந்திய அணி கடைசியாக டி20 உலகக் கோப்பை வென்று 12 வருடங்கள் ஆகிறது. 2007 ஆம் ஆண்டு இந்திய அணி முதல் 20 உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதன்பிறகு டி20 போட்டிகளில் பெரிய அளவில் இந்திய அணி சாதிக்கவில்லை. எனவே வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாதிக்க வேண்டும்.

pant 1

மேலும் அடுத்த உலகக்கோப்பை டி20 தொடரில் தோனி கண்டிப்பாக இடம்பெற மாட்டார் என்றே நான் கூறுவேன். ஏனெனில் அப்போது அவருக்கு வயது 39 ஆகும் அதனால் அவர் அந்த தொடரில் விளையாட மாட்டார் மேலும் பண்ட் அதற்குள் தனது குறைகளை நீக்கி சிறப்பாக விளையாடுவார் என்று நான் நம்புகிறேன். எனவே என்னைப் பொறுத்தவரை தோனியை விட பண்ட் அந்த இடத்தில் ஆடுவது சிறந்தது என்று கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement