எல்லாம் தெரிஞ்ச தோனி இப்படியா பண்ணுவாரு ? கேள்வி கேட்ட கவாஸ்கர் – விவரம் இதோ

Gavaskar

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணியில் இதுவரை விளையாடவில்லை. மேலும் ஒருநாள் போட்டிகளில் இனி தோனி ஆடுவது கடினம் தான் என்ற நிலையில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பைக்காக காத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

dhonistand

பலவருடம் அனுபவம் வாய்ந்த தோனி கடைசியாக கிரிக்கெட் விளையாடி ஐந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது. அதோடு தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்றும் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இதுவரை தனது ஓய்வு முடிவு குறித்து எந்த ஒரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

தற்போது ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலக கோப்பை டி20 தொடருக்கான போட்டியோடு அவர் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் ஐபிஎல் தொடரில் அவரது செயல்பாட்டை பொறுத்து தான் அவர் இந்திய அணியில் இடம் பிடிப்பாரா என்பது தெரியவரும். இந்நிலையில் தோனி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் தற்போது கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது :

Dhoni

டி20 உலக கோப்பையில் அவர் இடம் பிடிப்பாரா என்பது பற்றி அவரிடம் தான் கேட்கவேண்டும். அவருடைய உடல் தகுதி நிச்சயம் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படும். ஜூலை மாதத்திற்கு பிறகு இந்திய அணியில் அவர் இணைந்து ஆடவே இல்லை. இவ்வளவு அனுபவம் வாய்ந்த யாராவது நீண்டகாலம் இந்திய அணிக்காக ஆடாமல் இருப்பார்களா ? என்ற கேள்வியை கவாஸ்கர் எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -