மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இவர்கள் இருவரே துவக்க வீரர்களாக விளையாட வேண்டும் – கவாஸ்கர் கருத்து

Gavaskar
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 7ஆம் தேதி சிட்னி மைதானத்தில் துவங்க உள்ளது.

indvsaus

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்க இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் இப்போட்டியின் விறுவிறுப்பை அதிகரிக்கும் வகையில் இந்திய அணியின் அதிரடி வீரரான ரோகித் சர்மா அணியில் இணைய இருக்கிறார். இதனால் இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு தற்போது பல மடங்கு அதிகரித்து உள்ளது.

அதே போன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சொதப்பிய சில வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போகலாம் மேலும் காயமடைந்த உமேஷ் யாதவிற்கு பதிலாக அணியில் விளையாட போகும் வீரர் யார் ? என்பது குறித்த ஆவலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தற்போது 3-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் யார் ? துவக்க வீரர்களாக விளையாட வேண்டும் என்பதனை இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Agarwal

இந்த தொடரில் இதுவரை இந்தியாவின் தொடக்க வீரர் அகர்வால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. இருப்பினும் அவர் ஆடும் லெவனில் இருக்க விரும்புகிறேன். அவர் ஒரு தரமான பேட்ஸ்மேன். ரோகித் உடன் இணைந்து அவரே துவக்க வீரராக களமிறங்க வேண்டும். அதே நேரத்தில் ஐந்தாவது வீரராக சுப்மன் கில் இறங்கலாம். எனக்கு தெரிந்து அவர் ஓப்பனிங்கில் எந்த அளவிற்கு செயல்படுவார் என்று தெரியவில்லை.

Gill-1

ஆனால் மிடில் ஆர்டரில் நிறைய விளையாடிய உள்ளவர். அண்டர் 19 அணியிலும் மிடில் ஆர்டரில் நிறைய அனுபவம் இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரை கில் ஐந்தாவதாக வீரராக களமிறங்க வேண்டும். இந்த மாற்றங்களை செய்தால் அணியில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. கில் மிடில் ஆர்டரில் விளையாடும் பட்சத்தில் விஹாரி அணியில் இருந்து வெளியேற்றப்படுவார் என கவாஸ்கர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement