நீங்கள் சொன்னது தவறு. இந்திய அணியின் உண்மையான ஆல்ரவுண்டர் இவர்தான் – ஹர்பஜனிடம் சண்டைக்கு சென்ற கவாஸ்கர்

Sunil-gavaskar
- Advertisement -

சமீபத்தில் இந்திய அணி வீரர்கள் குறித்து பேசிய ஹர்பஜன் சிங் இந்தியாவின் மிகச் சிறந்த மட்ச் வின்னர் கும்ப்ளே தான் என்று பதிலளித்தார். அதில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, மகேந்திர சிங் தோனி, கங்குலி என பலரையும் விட்டுவிட்டு சுழற்பந்து வீச்சாளரான அணில் கும்பிளேவின் பெயரை கூறியிருந்தார்.

Kumble

அவர்தான் பல போட்டிகளில் இந்திய அணி தோற்கும் நிலையில் இருந்து மீட்டு வெற்றிக்கு அழைத்துச் சென்றனர் என்றும் விளக்கம் கொடுத்திருந்தார். பல முறை டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீட்டிருக்கிறார் என்று சுழற்ப்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் பேசுகிறார்.

- Advertisement -

இந்நிலையில் அவரின் இந்த கருத்திற்கு தற்போது கவாஸ்கர் எதிர்க் கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். சுனில் கவாஸ்கர் இதுகுறித்து அவர் கூறுகையில்… இந்திய அணியில் கவாஸ்கர்க்கு பிறகு சச்சின் டெண்டுல்கர் சச்சினுக்கு பிறகு விராட் கோலி என பேட்டிங் ஜாம்பவான்கள் வந்துவிட்டனர்.

gavaskar

அதேபோல் சுழற்பந்து வீச்சில் கும்லேவிற்கு பிறகு ஹர்பஜன்சிங் அவருக்குப் பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் என இடத்தைப் பிடித்துவிட்டனர். வேகப்பந்து வீச்சை பார்க்கையில் ஸ்ரீநாத், அதற்கு பிறகு ஜாகிர் கான் தற்போது புவனேஸ்வர் குமார் என ஒவ்வொரு இடமும் நிரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால், தற்போது வரை கபில் தேவின் இடம் நிரப்பப்படாமல் இருக்கிறது.

kapildev

அவரைப்போல் ஒரு வீரர் தற்போது வரை இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டும் யார் சிறந்த மேட்ச் வின்னர் என்று என்று பேசி, சுனில் கவாஸ்கர் ஹர்பஜன் சிங்கிற்கு பதில் கொடுத்துள்ளார். உண்மையில் பேட்டிங் மற்றும் பவுலிங் என கலக்கி இந்தியாவிற்கு முதல் உலகக்கோப்பையை பெற்றுத்தந்த கபில் தேவ்தான் இந்திய அணியின் சிறந்த மேட்ச் வின்னர் என்று கவாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement