இந்தியா பாக் வீரர்களை வைத்து பெஸ்ட் 11 டெஸ்ட் லெவன் அணியை தேர்வு செய்த கவாஸ்கர் – அணி விவரம் இதோ

Gavaskar
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களது வீட்டிற்கு உள்ளேயே முடங்கி உள்ளனர். மேலும் இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்தி அவர்கள் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

gavaskar

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே பல வீரர்கள் தங்களது ஆல் டைம் பெஸ்ட் லெவன் அணியை வெளியிட தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தனது சிறந்த டெஸ்ட் அணியை வெளியிட்டுள்ளார். அதில் பெரும்பாலானோர் அவர்களது காலகட்ட வீரர்களை தான் தேர்வு செய்துள்ளார்.

ஆனால் ஒரே சிறிய மாற்றமாக 2000 ஆம் ஆவது ஆண்டுகளில் விளையாடிய சேவாக் மற்றும் சச்சினை தேர்வு செய்துள்ளார். இந்த இரண்டு இந்திய வீரர்களை அவர் தனது டெஸ்ட் அணியில் தேர்வு செய்துள்ளார். அதன்படி சச்சின் மற்றும் சேவாக் ஆகியோரை தேர்வு செய்துள்ள அவர் துவக்க வீரராக சேவாக் மற்றும் ஹானீப் முகமதுவினை தேர்வு செய்துள்ளார்.

Sehwag

மூன்றாம் வரிசை வீரராக பாகிஸ்தான் வீரர் ஜாஹீர் அப்பாஸையும், நான்காவது வரிசையில் சச்சின் டெண்டுல்கரும் ஐந்தாவது வரிசையில் குண்டப்பா விஸ்வநாத் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார். அவரது காலகட்டத்தில் ஆடிய சிறந்த ஆல்ரவுண்டர்களான கபில் தேவ் மற்றும் இம்ரான் கான் ஆகியோரை ஆல்-ரவுண்டராக தேர்வு செய்துள்ள அவர் விக்கெட் கீப்பராக சையத் கிர்மாணியை தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

அது மட்டுமின்றி உலகின் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் ஆன வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரையும் ஒன்றாக தேர்வு செய்தவர். பின்பு ரிஸ்ட் ஸ்பின்னர் அப்துல் காதிரை கவாஸ்கர் தேர்வு செய்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் வீரர்கள் என்றாலும் பாரபட்சம் காட்டி அதிகமான இந்திய வீரர்களை தேர்வு செய்யாமல் நேர்மையான தேர்வினை கவஸ்கர் தெரிவு செய்துள்ளார் இதோ அவர் தேர்வு செய்த வீரர்களின் விவரம் :

kapildev

கவாஸ்கர் தேர்வு செய்த ஆல்டைம் டெஸ்ட் அணி இதோ : ஹனிஃப் முகமது, வீரேந்திர சேவாக், ஜாகீர் அப்பாஸ், சச்சின் டெண்டுல்கர், குண்டப்பா விஸ்வநாத், கபில் தேவ், இம்ரான் கான், சையத் கிர்மானி(விக்கெட் கீப்பர்), வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், அப்துல் காதிர்

Advertisement