கடந்த 20 வருடத்தில் பேட்டிங் மூலம் ரசிகர்களை மகிழ்வித்த வீரர் இவர்தான் – கவாஸ்கர் ஓபன் டாக்

Gavaskar
- Advertisement -

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இதன் காரணமாக பல கிரிக்கெட் வீரர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இதனை பயன்படுத்தி ரசிகர்களுடனும் முன்னால் வீரர்களுடனும் உரையாடி வருகின்றனர். இதேபோல் இந்தியாவின் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் பாகிஸ்தான் வீரர் ரமீஸ் ராஜாவுடன் ஒரு உரையாடல் நடத்தினார். அவரது யூடியூப் பக்கத்திற்கு நமது சுனில் கவாஸ்கர் பேட்டி கொடுத்திருந்தார். அதில் குறிப்பாக விரேந்தர் சேவாக் பற்றி மிகவும் புகழ்ந்து பேசினார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

gavaskar

- Advertisement -

கடந்த 20 ஆண்டுகளில் ரசிகர்களை மிகவும் மகிழ்வித்த பேட்ஸ்மேன் விரேந்தர் சேவாகதான். அவரது ஆட்டத்தை நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் பார்ப்போம். அவர் அதிரடியாக ஆட, நாங்கள் எங்கள் கைதட்டி உற்சாகப் படுத்திக் கொண்டிருப்போம்.அவர் விரைவில் ஆட்டம் இழந்துவிடக்கூடாது என்று எண்ணிக் கொண்டே இருப்போம் . டெஸ்ட் போட்டிகளில் அவர் ஒரு நாள் முழுவதும் அதிரடியாக ஆட வேண்டும் என்று பார்த்து காத்திருப்போம் .

அவர் உடனடியாக ஆட்டம் இழந்து விட்டால் கோபம் வந்துவிடும். 10 ரன்களுக்கு ஆட்டம் இழந்து விடாமல் அன்றைய நாள் முழுவதும் ஆட வேண்டும் என்று எதிர்பார்ப்போம். சொல்லப்போனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாரம்பரியமாக இருந்த நின்று ஆடும் பழக்கத்தை மாற்றி, அதிரடியாக ஆட அனைவருக்கும் சொல்லிக் கொடுத்தவர் அவர்தான். இதுபோன்ற அதிரடியான யுக்திகள் பலவற்றை கிரிக்கெட்டில் அவர் புகுத்தியிருக்கிறார்.

ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் ரசிகர்களையும் மக்களையும் மிகவும் மகிழ்வித்த கிரிக்கெட் வீரர் அவர்தான் என்று தெரிவித்துள்ளார் சுனில் கவாஸ்கர். அவரின் இந்த கருத்திற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வரவேற்பினை கமெண்டுகள் மூலம் அளித்து வருகின்றனர். மேலும் சேவாக் குறித்த பதிவை அதிகளவு பகிர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

விரேந்தர் சேவாக் இந்திய கிரிக்கெட் அணிக்காக கிட்டத்தட்ட 15 வருடங்களாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு முச்சதங்கள் அடித்த ஒரே இந்திய வீரர். 104 டெஸ்ட் போட்டிகளில் 8586 ரன்களும், 251 ஒருநாள் போட்டிகளில் 8271 ரன்களும் குவித்துள்ளார்.

Advertisement