கிரிக்கெட் கமெண்ட்ரி மூலம் “ஹிந்தி” திணிப்பு. கொதித்தெழுந்த ரசிகர்கள். சர்ச்சையான கவாஸ்கரின் பேச்சு – விவரம் இதோ

Gavaskar

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற கர்நாடக அணி மற்றும் பரோடா அணிக்கு எதிரான போட்டியில் பரோடா அணி இரண்டாவது இன்னிங்சில் ஏழாவது ஓவரில் ஒரு வர்ணனை சர்ச்சைக் கருத்து பேசப்பட்டது. இந்த போட்டி குறித்து வர்ணனை செய்து கொண்டு இருந்தவர்களில் ஒருவர் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர்.

Gavaskar

ஹிந்தி வர்ணனையாளரான இவர் ஹிந்தியில் வர்ணணை செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் மேலும் எனது சிறப்பான கருத்துக்களை தொடர்ந்து அந்த மொழியிலேயே நான் வழங்கி வருகிறேன் என்று கூறினார். மேலும் “டாட் பால்” எனும் பந்தினை ஹிந்தியில் “பிந்தி பால்” என்று அழைப்பார்கள். அப்படி அழைப்பது தனக்கு பிடிக்கும் என்று அவர் நேரடி வர்ணனை கூறியுள்ளார்.

மேலும் அப்போது மற்றொரு வர்ணனையாளர் ஆன ராஜேந்தர் அமர்நாத் அனைத்து இந்தியர்களுக்கும் இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும். இது நமது தாய்மொழி அதைவிட பெரிய மொழி மேலும் இதைவிட வேறு மொழி பெரியது இல்லை என்று கூறினார். நாம் ஏன் இந்தியில் பேச வேண்டும் என கேட்பவர்கள் மீது எனக்கு கோபம் வரும் நீங்கள் இந்தியாவில் இருக்கின்றீர்கள் அப்படி என்றால் உங்கள் தாய்மொழியான இந்தியில் தான் பேச வேண்டும் என்றும் அவர் கருத்தினை தெரிவித்தார்.

இந்த கருத்திற்கு தற்போது சமூக வலைதளங்களில் பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இந்த விடயம் சர்ச்சையாகும் வெடித்துள்ளது. ஏனெனில் போட்டி நடப்பதோ கர்நாடக மற்றும் பரோடா அணிக்கு எதிராக அதாவது கன்னட மொழியில் பேசும் மொழிக்கும், குஜராத் மொழி பேசும் அணிக்கும் இடையே நடைபெற்றது.

இந்த போட்டியில் ஏன் அவர்கள் இந்தியை இழுத்து பேச வேண்டும் என்று நெட்டிசன்கள் கொதித்துள்ளனர். மேலும் பிசிசிஐ கிரிக்கெட் மூலம் இந்தியைத் திணிக்கிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.