
இந்தியாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய 2025-ஆம் ஆண்டிற்கான 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் மே 8-ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி தரம்சாலா நகரில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அந்த போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான பதட்டமான சூழல் காரணமாக அந்த போட்டி நிறுத்தப்பட்டதாகவும் பின்னர் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2025 ஐபிஎஸ் தொடரானது தற்காலிகமாக ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது.
அதனை தொடர்ந்து அண்மையில் வெளியான செய்தியில் மீண்டும் மே 17-ஆம் தேதி திட்டமிட்டபடி இந்த ஐபிஎல் தொடரானது துவங்கும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது. மேலும் அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு அடுத்த சில நாட்களில் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் நடைபெற்று இந்த தொடரானது முடிவடையும் என்றும் பி.சி.சி.ஐ உறுதி செய்துள்ளது.
அதன்படி மே 17-ஆம் தேதி துவங்கும் இந்த ஐபிஎல் தொடரானது ஜூன் 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் டிஜே இசை மற்றும் சியர் லீடர்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
இந்த 2025 ஐ.பி.எல் தொடரில் இதுவரை 60 போட்டிகள் நடைபெற்று முடிந்து விட்டன. இன்னும் 15-16 ஆட்டங்கள் தான் எஞ்சியுள்ளன. எனவே இந்த தொடரின் எஞ்சிய போட்டிகளை இசை இல்லாமலும், சியர் லீடர்ஸ் இல்லாமலும் நடத்த வேண்டும். ஏனெனில் இந்தியாவில் அண்மையில் தான் சில மோசமான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
இதையும் படிங்க : மற்ற யார் கேப்டனா வந்தாலும் பும்ராவை உடைச்சுடுவாங்க.. அதுக்கு பும்ராவே கேப்டனாக இருக்கலாம்.. அஸ்வின்
தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்கள் சோகத்தில் இருக்கும் அவர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் எந்த ஒரு கொண்டாட்டமும் இன்றி இந்த ஐ.பி.எல் தொடரை நடத்தி முடிக்கலாம் என சுனில் கவாஸ்கர் வேண்டுகோள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.