கடவுள் கொடுத்த அற்புதமான டேலன்ட்டை இவர் வீணடித்து வருகிறார் – இளம்வீரர் மீது கவாஸ்கர் கோபம்

Gavaskar
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் அவ்வப்போது கிரிக்கெட்டில் நடக்கும் தருணங்கள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படையாக அறிவிக்கக் கூடியவர். அந்த வகையில் தற்போது நேற்று நடைபெற்று முடிந்த ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கான போட்டிக்கு பிறகு சஞ்சு சாம்சனின் ஆட்டம் குறித்து பேசியுள்ளார். இந்திய அணிக்காக 2015ஆம் ஆண்டு அறிமுகமான சஞ்சு சாம்சன் இதுவரை பத்து டி20 மற்றும் ஒரு ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

samson 1

- Advertisement -

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஐபிஎல் தொடர்களில் எப்போதுமே ஆரம்ப போட்டிகளில் சிறப்பாக விளையாடி பின்னர் சொதப்பக்கூடியவர். இந்நிலையில் இவர் தனது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு காரணம் என்ன என்பது குறித்து தற்போது சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சஞ்சு சாம்சனின் இந்த மோசமான ஆட்டத்திற்கு காரணம் அவரது தவறான ஷார்ட் செலக்சன் மட்டும்தான்.

சர்வதேச அளவில் அவர் விளையாடும்போது இரண்டாவது அல்லது மூன்றாவது விக்கெட்டிற்கு விளையாட தகுதியான ஒரு வீரர் தான். ஆனால் முதல் பந்தில் இருந்தே அவர் பந்தை கிரவுண்டுக்கு வெளியே அடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் அது முடியாத காரியம் மேலும் அப்படி நீங்கள் அடித்து ஆட நினைக்கும் போது உங்களுடைய பேட்டிங் பார்ம் வேஸ்ட் ஆகிவிடும். ஒரு நல்ல பிளேயர் பந்துகளை முதலில் எதிர்கொண்டு அதன்பிறகே அடிக்க நினைக்க வேண்டும்.

Samson-1

ஏற்கனவே இந்த தொடரின் முதல் பாதியில் ஒரு சதம் அடித்த சம்சோன் இந்த போட்டியில் 4 ரன்களில் வெளியேறியது எனக்கு வருத்தமளிக்கிறது. அவருடைய ஷாட் செலக்சன் மிகவும் தவறாக இருக்கிறது. அதில் நிச்சயம் அவர் கவனம் செலுத்தி அதனை முன்னேற்ற வேண்டும் என கவாஸ்கர் கூறியுள்ளார்.

Samson

மேலும் பேசிய அவர் : சஞ்சு சாம்சன் பேட்டிங் எப்போதும் சிறப்பாக இருந்தாலும் அவருடைய தவறான அணுகுமுறை காரணமாகவே அவர் தனது வாய்ப்பை இழந்து வருகிறார். கடவுள் கொடுத்த அற்புதமான டேலண்ட்டை அவர் வீணடித்து வருகிறார் எனவும் சுனில் கவாஸ்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement