இந்திய அணியின் 4 ஆவது வீரராக இவரே களமிறங்க வேண்டும் – கவுதம் கம்பீர் கருத்து

Gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகமான பிசிசிஐ கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் இந்த தொடருக்கான இந்திய அணியில் 15 முதன்மை வீரர்களை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி மூன்று ஸ்டாண்ட் பை வீரர்களையும் அவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

ashwin-2

- Advertisement -

இந்த தேர்வில் ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்த விடயங்களாக அஷ்வினின் கம்பேக் மற்றும் தோனியின் புதிய பதவியும் தான் இன்று அதிகளவு பார்க்கப்படுகின்றன. தற்போது இந்திய அணியில் தேர்வாகியுள்ள வீரர்களில் நம்பர் 4ஆம் இடத்திற்கு தகுதியானவர் யார் என்பது குறித்த தனது கருத்தினை முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

சூர்யகுமார் யாதவ் ஒரு கம்ப்ளீட் கிளாஸ் பேட்ஸ்மேன். ஷ்ரேயாஸ் ஐயரை விட இவரிடம் நல்ல திறமை உள்ளது. அதுமட்டுமின்றி சூர்யகுமார் யாதவ் ஒரு வெர்சடைல் பேட்ஸ்மென் ஏனெனில் அவரால் வித்தியாசமான பல ஷாட்களை டி20 கிரிக்கெட்டில் விளையாட முடியும். ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு திசைக்கு அடிக்கும் திறமையும் அவரிடம் உள்ளது. இதுதான் டி20 கிரிக்கெட்க்கு அவசியமான ஒன்று என கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

sky

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : சூரியகுமார் யாதவால் லேப் ஷாப் ஆட முடியும், கட் ஷாட் ஆட முடியும், மைதானத்தின் எந்த பகுதிக்கும் பந்தை தூக்கி அடிக்க முடியும். அது மட்டுமின்றி எந்த திசையில் வேண்டுமானாலும் அவரால் பந்தை விரட்ட முடியும். நம்பர் நான்காவது இடத்தில் இறங்கும் வீரர் இப்படி ஒரு வீரராக இருந்தால் மட்டுமே டி20 கிரிக்கெட்டில் அது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.

sky 1

எனவே போட்டியின் ஆரம்பத்தில் விக்கெட்டுகள் விழுந்தாலும் சூர்யகுமார் யாதவ் அணியின் ரன் ரேட்டை நிச்சயம் அதிரடியாக கொண்டு செல்வார். இந்த டி20 கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நான்காம் இடத்திற்கு சூர்யகுமார் யாதவ் நிச்சயம் பொருத்தமானவராக இருப்பார் என கம்பீர் தனது கருத்தினை கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement