இவர் அணியில் இருந்ததாலே தோனி சிறப்பான கேப்டனாக வலம் வந்தார் – கம்பீர் சர்ச்சை கருத்து

Gambhir
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் இருந்தது. அதற்கு முடிவு கட்டும் விதமாக கடந்த எட்டாம் தேதி தான் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது சவுத்தாம்ப்டன் நகரில் தொடங்கி நடந்து வருகிறது.

Gambhir

- Advertisement -

இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்திய இந்திய வீரர்கள் மட்டுமின்றி உலக அளவில் இருக்கும் வீரர்களும் கிரிக்கெட் குறித்த தங்களது அனுபவங்களையும், வீரர்கள் குறித்த தங்களது தனிப்பட்ட கருத்துக்களையும் சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தோனி குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் தோனி கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டனாக பார்த்து படுவதற்கு காரணம் இந்திய அணியில் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் தான் என்று தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் : என்னை பொறுத்தவரை ஜாகிர் கான் தான் இந்திய அணிக்கு கிடைத்த வேகப்பந்து வீச்சாளர்களில் சிறந்த ஒருவர்.

Zaheer

அவர் தோனி கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். அவர் தோனி தலை சிறந்த கேப்டனாக உருவாவதற்கு மிகவும் உதவியிருக்கிறார். 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக சச்சின், ஷேவாக், யுவராஜ், ஜாகீர்கான மற்றும் நான் ஆகியோர் இருந்தோம் என்றும் எங்களை உருவாக்க கங்குலி மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார் என்றும் கூறினார்.

ZaheerKhan

மேலும் அதற்காக கங்குலிக்கு தோனி நன்றி கடன் பட்டு இருக்கிறார் என்றும் பேசியுள்ளார். எப்பொழுதும் தோனி குறித்து சற்று மர்மமாகவே பேசும் கம்பீர் இப்போதும் சர்ச்சையாக ஒரு மாதிரி இந்த கருத்தை கூறியுள்ளார். தோனியின் தலைமையில் ஜாகீர்கான் 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 123 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளது.

Advertisement