இந்திய அணியின் அடுத்த கோலியாகவோ, ரோஹித்தாகவோ இவர் மாறுவார் – கம்பீர் நம்பிக்கை

Gambhir
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் படுமோசமான தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு முதன்மை காரணமாக இந்திய அணியின் பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டம் பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணியின் முதல் டெஸ்ட் தோல்விக்கு பிறகு இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக பல்வேறு மாற்றங்கள் அதிரடியாக செய்யப்பட்டுள்ளது.

bumrah

- Advertisement -

அதில் இந்திய கேப்டன் விராட் கோலி நாடு திரும்பியுள்ளதால் கேப்டன் பொறுப்பை அஜின்கியா ரகானே ஏற்று சிறப்பாக இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். முதல் டெஸ்ட் போட்டியில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷாவிற்க்கு பதிலாக சுப்மன் கில் மற்றும் முகமது ஷமிக்கு பதிலாக முகமது சிராஜ் இடம் பெற்றுள்ளனர். இதையடுத்து விக்கெட் கீப்பராக ரிசப் பந்த் இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் வெறும் 36 ரன்களை எடுத்ததால், ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 45 ரன்கள் குவித்து தனது விக்கெட் இழந்தார். 65 பந்துகளை எதிர்கொண்ட சுப்மன் கில் 45 ரன்கள் குவித்து 8 பவுண்டரிகள் விளாசியுள்ளார். இதன் மூலம் இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை பெற்றது.

Gill 2

மூன்றாவது நாளாக நடைபெறும் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இந்நிலையில், இந்திய தொடக்க வீரர் சுப்மன் கில் அடுத்த விராட்கோலி அல்லது அடுத்த ரோகித் சர்மாவாக மாறுவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் : “ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்குகிறார். ஒரு சில போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். இருப்பினும் இந்திய அணி நிர்வாகம் அவர் மீது முழு நம்பிக்கை வைத்து தொடக்க வீரராக களமிறக்க வேண்டும்.

Gill-1

இந்திய அணியின் சிறந்த கேப்டன் எம் எஸ் தோனி எவ்வாறு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிற்கு தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுத்து வந்தாரோ அதேபோல் சுப்மன் கிலுக்கும் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்க வேண்டும். அப்படி தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்கையில் அடுத்த விராட்கோலி அல்லது அடுத்த ரோகித் சர்மா உருவெடுப்பார்” என்று கௌதம் காம்பீர் கூறியுள்ளார்.

Advertisement