கிரிக்கெட் வீரராக 50 லட்சம். இப்போது எம்.பி யாக மறுபடியும் உதவி செய்த கம்பீர் – ரசிகர்கள் வாழ்த்து

Gambhir
- Advertisement -

கிரிக்கெட் வீரராக இருந்து தற்போது மாநிலங்களவை உறுப்பினராக மாறியுள்ள கவுதம் கம்பீர் பொதுமக்களுக்கு சேவை செய்ய துவங்கியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் இடதுகை துவக்க வீரரான கௌதம் கம்பீர் இந்தியாவில் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெற்றார்.

gambhir 1

- Advertisement -

அதன் பின் உடனடியாக அரசியல் தொடர்பான வேலைகளை களமிறங்கினார். பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். அப்போது முதல் தற்போது வரை டெல்லி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் கரோனா வைரஸ் கடுமையாக பரவி வரும் வேளையில் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உபகரணங்கள் வாங்க ரூபாய் 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கம்பீர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டதாவது :

Gautham-Gambhir

மிக வேகமாக பரவி வரும் வைரஸ் இருந்து மக்களை காப்பதற்காகவும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக நாட்டை காப்பாற்ற மற்றும் நாட்டு மக்களை நடைமுறைப் படுத்தும் நோக்கத்தில் 50 லட்சம் ரூபாயை நான் வழங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

மேலும் இதனைத்தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், பா.ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான கவுதம் கம்பிர் தன்னுடைய எம்.பி.யின் உள்ளூர் மேம்பாட்டு திட்டத்திற்கான நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை வழங்கியுள்ளார்.

gambhir

இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் : ‘‘இந்த நேரம் நாட்டின் அனைத்து வளங்களையும் கொரோனாவிற்கு எதிரான போரில் செயல்படுத்த வேண்டும்”. நான் உள்ளூர் மேம்பாட்டு திட்டத்திற்கான நிதியில் இருந்து ஒருகோடி ரூபாயை ஒதுக்கியுள்ளேன். ஏற்கனவே என்னுடைய ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளேன். நாம் ஒன்றாக நிற்போம் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement