கொரோனா சிகிச்சை உபகரணங்கள் வாங்க ரூ. 50 லட்சம் கொடுத்த இந்திய கிரிக்கெட் வீரர் – அவரது செயலை பாராட்டலாமே

Ind
- Advertisement -

கிரிக்கெட் வீரராக இருந்து தற்போது மாநிலங்களவை உறுப்பினராக மாறியுள்ள கவுதம் கம்பீர் பொதுமக்களுக்கு சேவை செய்ய துவங்கியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் இடதுகை துவக்க வீரரான கௌதம் கம்பீர் இந்தியாவில் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெற்றார்.

gambhir

- Advertisement -

அதன் பின் உடனடியாக அரசியல் தொடர்பான வேலைகளை களமிறங்கினார். பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். அப்போது முதல் தற்போது வரை டெல்லி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் கரோனா வைரஸ் கடுமையாக பரவி வரும் வேளையில் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உபகரணங்கள் வாங்க ரூபாய் 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கம்பீர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டதாவது :

gambhir 1

மிக வேகமாக பரவி வரும் வைரஸ் இருந்து மக்களை காப்பதற்காகவும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக நாட்டை காப்பாற்ற மற்றும் நாட்டு மக்களை நடைமுறைப் படுத்தும் நோக்கத்தில் 50 லட்சம் ரூபாயை நான் வழங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதற்கு முன்னதாக கடந்த 22ஆம் தேதி இந்தியா முழுவதும் லாக் டவுன் கடைபிடிக்கப்பட்டது. ஆனால் சிலர் 9 மணிக்கு பின்னர் கூட்டம் கூட்டமாக வீதிகளில் வந்து தேவையில்லாத செயல்களை செய்து கொண்டிருந்தனர். இதனால் கடுப்பான கம்பீர் மக்களை தனிமைப்படுத்த வேண்டும் அல்லது வெளியில் வருபவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்று காட்டமாக தெரிவித்திருந்தார்.

corona 1

இந்தியாவிலும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பலவற்றை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement