என் மகள் இந்த கேள்வி என்கிட்ட கேட்டு விடுவாளோ என்று பயமா இருக்கு..! – கம்பிர் வேதனை..?

guatham
- Advertisement -

சமீப காலமாக பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்து வரும் சம்பவம் அதிகரித்து வருவது பார்க்கவே கொடுமையாக இருக்கிறது. அதிலும் சில நாட்களுக்கு முன்னர் காஷ்மீரில் ஆஷிபா என்ற சிறுமியின் கொடூர மரணம் கண்களில் கண்ணீர் வர வைத்தது.இந்நிலையில் பெண் குழந்தைகளுக்கு எதிரான இந்த கொடுமைகளை குறித்து மனம் குமிறியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கார்த்திக்.
gautham gambir

சமீபத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை பற்றி பிரபல ஆங்கில நாளிதழுக்கு கட்டுரை ஒன்றை எளிதியுள்ளார் அதில்”சமீப காலமாக பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் பாலியல் தொல்லைகளை பற்றி கேள்விப்பட்டால் பதறுகிறது. அதுவும் பெண் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்பட்ட செய்திகளை பாரத்தால் அச்சமாக இருக்கிறது.

இதெயெல்லாம் பார்த்து எங்கே என்னுடைய மகள் என்னிடம் பலாத்காரம் என்றால் என்ன என்று கேட்டு விடுவாளோ என்று பயமாக இருக்கிறது. இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையாக உள்ள நான் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதலை குறித்து நினைக்கும் போது மிகுந்த வேதனை அடைகிறேன்.
gambhir

இந்த கட்டுரையை நான் எழுத்துவதற்கு முன் பல்வேறு குழந்தைகளுக்கு எதிராக நடந்துள்ள பல்வேறு பலாத்காரம் குறித்து படித்த பொது என் ரத்தம் உறைந்து போனது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் படி கடந்த 10 ஆண்டுகளில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் 336 சதவீதம் அதிகரித்துள்ளது. இது போன்ற செயல்களை செய்பவர்கள் தீவிரவாதிகளை விட மிக மோசமானவர்கள்” என்று மிக உருக்கமாக எழுதியுள்ளார்.

- Advertisement -
Advertisement