0-5 ன்னு இந்தியா தோத்தாலும் கம்பீரை யாரும் தூக்க மாட்டாங்க.. பி.சி.சி.ஐ அதிகாரி – வெளியிட்ட தகவல்

Gambhir
- Advertisement -

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது தற்போது நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் தொடரின் ஆரம்பத்திலேயே தோல்வியை சந்தித்து ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. அதனை தொடர்ந்து ஜூலை 2-ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

கவுதம் கம்பீரை யாராலும் நீக்க முடியாது : பி.சி.சி.ஐ அதிகாரி

அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் முதல் தொடராக நடைபெற்று வரும் இந்த தொடரில் வெற்றியுடன் இந்திய அணி தங்களது பயணத்தை துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் போட்டியிலேயே இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளதால் இனிவரும் ஆட்டங்கள் இந்திய அணிக்கு முக்கிய ஆட்டங்களாக பார்க்கப்படுகின்றன.

- Advertisement -

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருவது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதோடு டெஸ்ட் போட்டிகளில் ஏற்பட்டு வரும் தொடர் தோல்விகள் கௌதம் கம்பீரின் பதவிக்கும் அழுத்தத்தை தரும் என்று பலரும் பேசி வருகின்றனர்.

ஏனெனில் கௌதம் கம்பீரின் தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றி இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் தடுமாற்றத்தையே சந்தித்து வருகிறது. அதன் காரணமாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கம்பீர் தொடர்ச்சியாக பயிற்சியாளராக இருப்பார் என்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு புதிய பயிற்சியாளர் கொண்டு வரப்படலாம் என்ற பேச்சுக்கள் சமீபத்தில் அதிகளவு சமூக வலைதளத்தில் இருந்து வந்தது.

- Advertisement -

ஆனால் தற்போது இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி இந்த தொடரை (0-5) என்ற கணக்கில் மோசமாக இழந்தாலும் கௌதம் கம்பீர் பதவியில் இருந்து நீக்கப்பட மாட்டார் என பெயர் குறிப்பிடப்படாத ஒரு பிசிசிஐ அதிகாரி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : கௌதம் கம்பீர் தற்போது இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியை புதிய பரிமாணத்திற்கு தயார்படுத்தி வருகிறார்.

அந்தவகையில் அவர் தனது வேலையை சிறப்பாகவே செய்கிறார். ஏனெனில் தற்போதைய இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி துவக்கத்திலேயே பெரியளவு வெற்றிகளை பெறாது என்றாலும் இனிவரும் தொடர்களில் நிச்சயம் சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதோடு கௌதம் கம்பீரும் இந்த அணியை வருங்காலத்தில் அசைக்க முடியாத வலுவான அணியாக மாற்றும் முயற்சியில் இருக்கிறார்.

இதையும் படிங்க : இங்கிலாந்து மண்ணில் அவரது பந்துவீச்சு எடுபடாது.. அதனால் குல்தீப் யாதவை கொண்டுவாங்க – பிராட் ஹடின் பேட்டி

எனவே அதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும் என்பதனால் கம்பீரின் மீதுள்ள நம்பிக்கையை பி.சி.சி.ஐ வலுவாக வைத்துள்ளது. எனவே இந்த இங்கிலாந்து தொடர் எப்படி அமைந்தாலும் கெளதம் கம்பீரின் பதவிக்கு ஆபத்து கிடையாது என அந்த பிசிசிஐ அதிகாரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement