- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நான் வெற்றிகரமான கோச் ஆகலனாலும் பரவால்ல.. இந்தியா இதுக்காக பயப்படக் கூடாது.. கம்பீர் மெசேஜ்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். அவருடைய தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா முதல் முறையாக தோற்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை கோட்டை விட்ட இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கையில் 27 வருடங்கள் கழித்து தோல்வியுற்ற இந்தியா 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்று சாதனை படைத்தது. இருப்பினும் டி20 கிரிக்கெட்டில் கம்பீர் வழிகாட்டுதலில் இந்தியா நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதனாலேயே தென்னாபிரிக்காவில் நடைபெற்ற தொடரை டி20 வென்ற இந்தியா 2025 ஆசியக் கோப்பையை வென்று தொடர்ந்து நம்பர் ஒன் டி20 அணியாக ஜொலித்து வருகிறது.

- Advertisement -

தோல்வி பயம் கூடாது:

இந்நிலையில் தாம் இந்திய அணியின் வெற்றிகரமாக பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். மாறாக இந்தியாவை பயமற்ற அணியாக உருவாக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி கம்பீர் பேசியது பின்வருமாறு. “எங்களுடைய அணியில் அதீத ஆக்ரோஷமான அணுகுமுறையை பின்பற்றுகிறோம்”

“அந்த தத்துவத்தைப் பின்பற்றும் போது தோல்வியைத் தவிர்க்க முடியாது. டி20 கிரிக்கெட்டில் நாங்கள் தனிப்பட்ட நபர்களின் ரன்களைக் காட்டிலும் விளையாட விரும்பும் கிரிக்கெட்டின் பிராண்ட் மீது கவனம் செலுத்த விரும்புகிறோம். அந்த அதிரடியான அணுகு முறையில் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் அதிகமாக தோற்கலாம். ஆனால் அவர்கள் அடிக்கும் ரன்களை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்”

- Advertisement -

கம்பீர் வெளிப்படை:

“எங்கள் கேப்டன் சூரியகுமார் யாதவ் மனிதாபிமானம் மிக்கவர். நல்ல மனிதர்கள் நல்ல தலைவர்களாக வருவார்கள். என்னை பற்றி அவர் உயர்வாக பேசுகிறார். உண்மையில் போட்டியை நான் படிக்கும் விதத்தை வைத்து அவருக்கு நியாயமான ஆலோசனைகளை வழங்குவது மட்டுமே என்னுடைய வேலை. இது சூரியகுமாரின் அணி. அவருடைய குணம் டி20 கிரிக்கெட்டுக்கு கச்சிதமாக பொருந்தும். அவை அனைத்தும் சுதந்திரம் மற்றும் வெளிப்படுத்துதலைப் பற்றியது”

இதையும் படிங்க: போட்டிக்கு அவர் காத்திருப்பதால்.. விராட், ரோஹித்தை விட சுப்மன் கில் தான் ப்ரஷர்ல இருக்காரு.. ஸ்ரீகாந்த்

“களத்திற்கு வெளியே நீங்கள் கொண்டிருக்கும் நடத்தை இந்திய அணியில் எதிரொலிக்கும். அந்த வகையில் சூரியகுமார் இந்திய அணியின் சூழ்நிலையை கடந்த 1.5 வருடங்களாக சிறப்பாக கையாண்டு வருகிறார். நாங்கள் முதல் முறை பேசிய போது ஒன்றை ஒப்புக்கொண்டோம். அதாவது நாங்கள் தோல்விக்காக பயப்படக்கூடாது. நான் வெற்றிகரமான பயிற்சியாளராகும் இலக்கை கொண்டிருக்கவில்லை. நான் எங்களை மிகவும் பயமற்ற அணியாக இருப்பதைப் பார்க்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -