தோனி இதை மாற்ற வேண்டும்..! எதற்காக இப்படி இருக்கிறார்..! கம்பிர் வேண்டுகோள்..! – காரணம் இதுதான்..?

gambhir

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி தனது ஹேர் ஸ்டைல் விடயத்தில் எப்போதும் கொஞ்சம் கவனம் செலுத்தி வருவார். தோனி பலவிதமான ஹேர் ஸ்டைலை வைத்திருக்கிறார். ஆனால், சமீபத்தில் தோனி வைத்திருக்கும் ஹேர் ஸ்டைல் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீருக்கு அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை போல.
ms
கிரிக்கெட் உலகில் நுழைந்த போது காது வரை முடியுடன் களமிறங்கிய தோனி பின்னர் தனது முடியை ஷார்ட் கட்டிங் செய்து மேலும் ஸ்மார்ட் லுக்கில் மாறினார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளின் போதும் தோனியின் ஹேர் ஸ்டைல் அனைவராலும் கவனிக்கபட்டது. இந்நிலையில் சமீபத்தில் “வாட் தி டக்” என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்ற கம்பீர் தோனியின் தற்போதைய தோற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இது குறித்து கம்பீர் தெரிவிக்கையில்”எம் எஸ் தோனி தற்போது 5-10 வயது அதிகமாக தெரிகிறார். அவரிடம் யாராவது ‘தற்போது உங்கள் வயதை ஒப்பிடும் போது கொஞ்சம் வயதானது போல தெரிகிறீர்கள் ‘என்பதை கூற வேண்டும். அவர் தற்போதும் பிட்டாக இருக்கிறார் என்று தான் நினைக்கிறேன். அவருடைய தோற்றம் தான் அவரை மிகவும் வயதானவர் போல காட்சி அளிக்கிறது’ என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.


தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வரும் தோனி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தான் இருக்கிறார். 37 வயதாகும் தோனி இன்னுமும் ஒடுகளத்தில் ஒரு இளம் வீரரை போலவே இருந்து வருகிறார். ஆனால், சமீப காலமாக அவர் வெள்ளை முடியுடன் தோற்றமளிப்பதால் கொஞ்சம் வயதானது போல தெரிகிறார். அதனை குறிப்பிட்டே கம்பீர் இப்படி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.