கொல்கத்தா அணியின் கேப்டனாக மீண்டும் ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம். மறைமுகமாக குத்திக்காட்டி கம்பீர் போட்ட பதிவு

Gambhir-and-Shreyas
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2023-ஆம் ஆண்டிற்கான பதினாறாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணியின் புதிய கேப்டனாக நிதீஷ் ராணா நியமிக்கப்பட்டு அவரது தலைமையிலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடியது. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய கொல்கத்தா அணி 6 வெற்றிகள் மற்றும் 8 தோல்விகள் என புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்து வெளியேறி இருந்தது.

முன்னதாக கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கு முன் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியதாலே புதிய கேப்டனாக நிதிஷ் ராணா செயல்பட்டார்.

- Advertisement -

பின்னர் தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக தற்போது மீண்டும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா அணிக்கு திரும்பும் அவர் மீண்டும் கேப்டனாகவும் அந்த நிர்வாகத்தின் சார்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் 12 கோடியே 25 லட்சத்திற்கு வாங்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், இயான் மோர்கனுக்கு அடுத்து கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு காயத்தால் அவர் விளையாடவில்லை என்றாலும் அடுத்த ஆண்டு அவர் கேப்டனாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு நிதீஷ் ராணாவே இந்த ஆண்டும் தொடர்ச்சியாக கேப்டனாக இருக்கட்டும் என தற்போது அந்த அணியின் புதிய மென்டாராக நியமிக்கப்பட்டுள்ள கௌதம் கம்பீர் நிர்வாகத்தை கேட்டுக் கொண்டாலும் அணியின் நிர்வாகம் ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக அறிவித்து நிதீஷ் ரானாவை துணை கேப்டனாக அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : போர்டில் நல்லா தெரியுதா? மிட்சேல் ஜான்சனுக்கு வார்னர்.. பாகிஸ்தானை பந்தாடி மறைமுக பதிலடி

இதனால் சற்று அதிருப்தி அடைந்த கம்பீர் அணி நிர்வாகத்தை மறைமுகமாக குத்தி காட்டுவது போன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் “வாழ்த்துக்கள் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் நிதீஷ் ராணா” போருக்காக தயாராக இருங்கள் (கேப்டன்சி போட்டி) என்பது போல் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அவரது இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement