- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய கோச்சிங் சறுக்கல் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த – கவுதம் கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட் 2024 டி20 உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியதால் அவருக்கு அடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரரான கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் இந்திய அணி 2025 இல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்று அசத்தியது. அதன்பின்னர் அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

டெஸ்ட் கோச்சிங்கில் ஏற்பட்டுள்ள சறுக்கல் ஏன்? : கவுதம் கம்பீர் விளக்கம்

இப்படி அடுத்தடுத்த ஐசிசி கோப்பைகளை வெற்றி பெற்று தந்த முதல் இந்திய பயிற்சியாளர் என்ற பெருமையை கௌதம் கம்பீர் பெற்று இருந்தாலும் டெஸ்ட் போட்டிகளில் அவரது செயல்பாடு மோசமாக இருந்து வருவதாக விமர்சனங்கள் இருந்து வருகின்றன. ஏனெனில் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில் ஒயிட் வாஷ் தோல்வியை இந்திய அணி சந்தித்து இருந்தது.

- Advertisement -

இதன் காரணமாக டெஸ்ட் அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என்று விமர்சனமும் இருந்து வருகிறது. இந்நிலையில் அவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சில பதில்களை கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை தற்போதுள்ள இந்திய அணியில் 22, 23, 24 வயதுடைய பல இளம் வீரர்கள் இருக்கிறார்கள்.

ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் இருந்து அஸ்வின், விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற அனுபவ வீரர்கள் ஓய்வு பெற்றதால் அவர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை கொண்டு வந்து ஆறு மாதங்களுக்குள் அவர்களை உருவாக்குவது என்பது எளிதான விடயம் கிடையாது. தற்போது இந்திய அணி டெஸ்ட் போட்டிகளை பொறுத்த வரை சரிவை சந்தித்திருந்தாலும் இளம் வீரர்களுக்கு நாம் ஆதரவளிக்கும் போது தான் அவர்கள் மெருகேறுவார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : அந்தவொரு தோல்விதான் எங்களை கோப்பையை ஜெயிக்க தூண்டியது – ஷிவம் துபே ஓபன்டாக்

டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை இந்திய அணி வலிமையான அணியாக மாற சில காலம் பிடிக்கும். அந்த அவகாசத்தை நாம் அவர்களுக்கு வழங்கியாக வேண்டும். தற்போது டெஸ்ட் போட்டிகளை விட ஒயிட் பால் போட்டிகளை நாம் அதிகமாக விளையாடி வருகிறோம். எனவே டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை சற்று கால அவகாசம் கொடுத்தால் நிச்சயம் இந்திய அணி பெரிய முன்னேற்றத்தை காணும் என கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -