4 இன் ஒன் ராகுல் மாதிரி பிளேயர் உலகத்தில் கிடைக்க மாட்டாரு.. அதுக்கெல்லாம் நான் கவலைப்படல.. கம்பீர் பேட்டி

Gautam gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. சமீபத்தில் நியூஸிலாந்திடம் சொந்த மண்ணில் இந்தியா ஒய்ட் வாஸ் தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற ஆஸ்திரேலிய தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் சமீப காலங்களாகவே சுமாராக விளையாடி இந்தியாவில் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறார். அதனால் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 அணியில் வாய்ப்பை இழந்த அவருக்கு டெஸ்ட் அணியில் மட்டும் அனுபவத்தை கருத்தில் கொண்டு வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. அந்த வாய்ப்பிலும் சமீபத்திய வங்கதேச மற்றும் நியூசிலாந்து தொடர்களில் அவர் சிறப்பாக செயல்படவில்லை.

- Advertisement -

என்ன ஒரு பிளேயர்:

இருப்பினும் அவரை ஆஸ்திரேலிய தொடரில் எப்படியாவது விளையாட வைக்க வேண்டும் என்பதற்காக இந்தியா ஏ விளையாடிய 2வது பயிற்சி போட்டியில் அணி நிர்வாகம் விளையாட வைத்தது. ஆனால் அந்த வாய்ப்பிலும் துவக்க வீரராக களமிறங்கி அரை சதம் கூட அடிக்காத ராகுல் ஏமாற்றத்தையே கொடுத்தார். அதனால் அவரை அணியிலிருந்து மொத்தமாக நீக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இந்நிலையில் ராகுல் போன்ற வீரர் அவ்வளவு சுலபமாக கிடைக்க மாட்டார் என்று கௌதம் கம்பீர் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவரால் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்ய முடியும். அவரால் 3வது இடத்தில் பேட்டிங் செய்ய முடியும். தேவைப்பட்டால் 6வது இடத்திலும் அவரால் விளையாட முடியும். இது போக ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங் செய்கிறார்”

- Advertisement -

கம்பீர் ஆதரவு:

“எனவே ராகுல் போல ஓப்பனிங், 4, 6வது இடத்தில் பேட்டிங் செய்வதுடன் கீப்பிங் செய்யும் திறமை கொண்ட வீரர்கள் உலகில் மற்ற அணிகளில் எவ்வளவு பேர் உள்ளார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அதனால் முதல் போட்டியில் ரோஹித் சர்மா போன்றவர் விலகினால் ராகுல் அந்த இடத்தை நிரப்பக்கூடியவர் என்று நான் கருதுகிறேன்”

இதையும் படிங்க: அவங்கள பற்றியும் இந்தியாவை பற்றியும் பேச நீங்க யார்? அந்த வேலையை பாருங்க.. பாண்டிங்க்கு கம்பீர் பதிலடி

“நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியால் சமூக வலைதளங்களில் எனக்கு எதிராக ஏற்பட்டுள்ள கிண்டல்கள் எனது வாழ்வில் என்ன மாற்றத்தை செய்து விடப் போகிறது? இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்கும் போது இது மிகவும் கடினமான கௌரவமான வேலை என்பதை எனக்குத் தெரியும். எனது வேலையை உண்மையுடன் செய்வதால் நான் அழுத்தங்களை சந்திப்பதாக உணரவில்லை. எனவே இதைப் பற்றியும் கவலைப்படாமல் இந்திய வீரர்களுக்கும் பயிற்சியை கொடுக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement