- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உங்களால தான் விராட் கோலி சதமடிச்சுட்டாரு, நீங்க அதை தவற விட்டுடிங்க – ரோஹித்தை விளாசிய கம்பீர் – காரணம் என்ன

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள இந்தியா ஜனவரி 12ஆம் தேதியன்று கொல்கத்தாவில் நடைபெறும் 2வது போட்டியிலும் வென்று கோப்பை வெல்ல போராட உள்ளது. முன்னதாக கௌகாத்தியில் நடைபெற்ற முதல் போட்டியில் பேட்டிங்கில 373 ரன்கள் குவித்த இந்தியா பின்னர் இலங்கையை பந்து வீச்சிலும் 306 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வெற்றி பெற்றது. குறிப்பாக 113 ரன்கள் விளாசி சதமடித்த நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

கடந்த 15 வருடங்களாக இதே போல் 3 வகையான கிரிக்கெட்டிலும் நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் அவர் 2019க்கு பின் சதமடிக்கவில்லை என்பதற்காக அணியிலிருந்து நீக்குமாறு கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். இருப்பினும் மனம் தளராமல் போராடிய அவர் 2022 ஆசிய கோப்பையில் சதமடித்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடி கடந்த மாதம் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சதமடித்து அசத்தினார். தற்போது 2023 புத்தாண்டில் முதல் போட்டியில் சதமடித்துள்ள அவர் முழுமையாக பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

- Advertisement -

தவற வீட்டுட்டீங்க:
மறுபுறம் நவீன கிரிக்கெட்டில் அவரைப் போலவே குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்களையும் 2019 உலகக்கோப்பையில் 5 சதங்களையும் விளாசி ஹிட்மேன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்ற பின் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியாமல் திண்டாடி வருகிறார். அதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள அவர் இப்போட்டியில் சுப்மன் கில்லுடன் இணைந்து 143 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்.

குறிப்பாக தமக்கே உரித்தான பாணியில் அதிரடியாக சிக்சர்களை பறக்க விட்டு அட்டகாசமாக விளையாடிய அவர் 2020 ஜனவரிக்கு பின் ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய அடுத்த சதத்தை விளாசி தன் மீதான விமர்சனங்களை அடித்து நொறுக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 83 ரன்களில் இன்சைட் எட்ஜ் வாங்கி போல்டான அவர் ஏமாற்றத்துடன் சென்றாலும் பார்முக்கு திரும்பி விட்டேன் என்று என்பதை உணர்த்தும் வகையில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

மொத்தத்தில் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வரை நடைபெறும் இத்தொடரில் இந்திய பேட்டிங்கின் இரு தூண்களும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடை வைத்துள்ளது. ஆனால் அப்போட்டியில் ரோஹித் சர்மா விளையாடிய விதத்துக்கு இரட்டை சதமடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நீங்கள் தவற விட்ட வாய்ப்பை பயன்படுத்தி விராட் கோலி சதமடித்து விட்டதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அப்போட்டியின் முடிவில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவருமே அவுட்டான பின் நம்மால் எளிதாக 150 – 160 ரன்களை அடித்திருக்க முடியும் என்பதை நினைத்து தங்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பார்கள். குறிப்பாக நல்ல தொடக்கத்தை பெற்ற ரோகித் சர்மா நிலைத்து நின்றிருந்தால் எளிதாக மற்றுமொரு இரட்டை சதத்தை விளாசியிருப்பார்”

இதையும் படிங்க: இனியும் அவர நம்பி பிரயோஜனம் இல்ல, 2023 உ.கோ வெல்ல வேற நல்ல இளம் வீரர்களை பாருங்க- ஆகாஷ் சோப்ரா அதிரடி

“அதனால் நிச்சயமாக அவர் தன்னையே உதைத்திருப்பார். காரணம் அந்த மொத்த போட்டியையும் அடித்து நொறுக்கும் அளவுக்கு அவருக்கு அற்புதமான வாய்ப்பு இருந்தது. ஏனெனில் அவர் பேட்டிங் செய்த விதம் அப்படி அதிரடியாக இருந்தது. அதனால் அவர் நினைத்திருந்தால் மற்றுமொரு இரட்டை சதத்தை எளிதாக அடித்திருக்கலாம். ஆனால் அவர் தவற விட்ட அந்த வாய்ப்பு வேறு ஒருவருக்கு சென்று விட்டது. குறிப்பாக விராட் கோலி அதை இரு கைகளிலும் பிடித்துக் கொண்டார். டாப் வீரர்கள் அவ்வாறு தான் செயல்படுவார்கள். அவர்கள் நல்ல ரன்களை பெரிய ரன்களாக மாற்றுவார்கள். விராட் கோலி அதைத்தான் செய்தார்” என்று கூறினார்.

- Advertisement -
Published by