தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோற்றது. அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்தியா டெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்விக்கு தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது. முன்னதாக பயிற்சியளராக கௌதம் கம்பீர் வந்தது முதல் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் திண்டாடி வருகிறது.
சோதனை என்ற பெயரில் அவர் செய்யும் மாற்றங்கள், தவறான தேர்வுகள் கடந்த நியூஸிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்களில் இந்தியாவுக்கு வரலாற்றுத் தோல்விகளைப் பரிசளித்தது. எடுத்துக்காட்டாக முதல் டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தரை 3வது இடத்தில் களமிறக்கிய அவர் அடுத்த போட்டியில் 8வது இடத்தில் விளையாட வைத்தார். அதே போல வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிலும் பேட்டிங்கை இசை நாற்காலி போல மாற்றுவது வாடிக்கையாகி விட்டது.
ஓவர்ரேட்டட் பேட்டிங் ஆர்டர்:
அதனால் அவருடைய அணுகுமுறையை பலரும் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பேட்டிங் வரிசை என்பது ஓவர்ரேட்டட் என்று கௌதம் கம்பீர் புது விளக்கத்தை கொடுத்துள்ளார். அதனாலேயே சுந்தர் போன்ற வீரர்களை 3 – 8 வரையிலான இடங்களில் சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் மாற்றி மாற்றி களமிறங்குவதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இது பற்றி கம்பீர் பேசியது பின்வருமாறு. “ஒருநாள் கிரிக்கெட்டில் நீங்கள் எந்த விதத்தில் விளையாட விரும்புகிறீர்கள் என்பது பற்றிய டெம்ப்ளேட் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஓப்பனிங் தவிர்த்து மற்ற பேட்டிங் வரிசை மிகவும் ஓவர்ரேட்டட் என்று நான் எப்போதும் நம்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் கண்டிப்பாக உங்களுக்கு நிலையான பேட்டிங் ஆர்டர் தேவை”
சுந்தரை பாருங்க:
“ஆனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் நிச்சயம் அது மிகவும் ஓவர்ரேட்டட். நீங்கள் எப்போதும் மான்செஸ்டர்ரில் யார் சதமடித்தார், யார் 40க்கும் மேற்பட்ட பேட்டிங் சராசரியை வைத்துள்ளார்கள் என்று பேசுகிறீர்கள். சில நேரங்களில் நீங்கள் சமநிலையைப் பார்க்க வேண்டும். அது வாஷிங்டன் போன்றவருக்கு மிகவும் கடினமானது என்பது எனக்குத் தெரியும்”
இதையும் படிங்க: 9 பந்தில் 23.. 1933க்குப்பின் சாதனை ஃபினிஷ்.. 2019 போல மண்டையை குறிவைத்த ஆர்ச்சரை அடித்து நொறுக்கிய ஸ்மித்
“ஆனால் 3, 5, 8 ஆகிய இடங்களில் விளையாடிய அவர் மிகவும் அற்புதமாக பேட்டிங் செய்தார் என்று நினைக்கிறேன். அது போன்ற கேரக்டர் தான் எங்களுடைய அணிக்குத் தேவை. அணிக்காக சிரிப்புடன் அனைத்தையும் செய்ய வேண்டும். ஒரு பேட்ஸ்மேனாக அது கடினம் என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் அதைத் தொடர்ந்து செய்ய உள்ள அவரை நாங்கள் முன்னேற்ற உள்ளோம். ஏனெனில் இந்திய கிரிக்கெட்டில் அவருக்கு வளமான எதிர்காலம் உள்ளது” என்று கூறினார்.



