இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலி ஆகியோர் நேர்காணல் நடத்தினர். அது ரசிகர்களுக்கு பெரிய ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் நாட்டுக்காக ஒன்றாக விளையாடிய அவர்கள் நாளடைவில் ஐபிஎல் தொடரில் சண்டையிட்டனர். இருப்பினும் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக வந்துள்ளதால் கௌதம் கம்பீர் – விராட் கோலி ஆகியோர் மீண்டும் ஒன்றாக இணைந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2012 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி அடித்த 183 ரன்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர் விளையாடிய சிறந்த இன்னிங்ஸ் என்று கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார். வங்கதேசத்தில் நடைபெற்ற அந்தத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 330 ரன்களை துரத்தியது. அப்போட்டியில் கௌதம் கம்பீர் பாகிஸ்தானிடம் டக் அவுட்டானார்.
சிறந்த இன்னிங்ஸ்:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி பாகிஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்கி 183* ரன்கள் விளாசி சிக்ஸருடன் மாஸ் ஃபினிஷிங் செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அந்த இன்னிங்ஸ் பற்றி விராட் கோலிக்கு நேராக கௌதம் கம்பீர் பாராட்டியது பின்வருமாறு. “நீங்கள் இந்தியாவுக்காக அறிமுகமானதை பார்த்துள்ளேன். இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு சவாலான பிட்ச்சில் எதிராக சிறப்பாக விளையாடினீர்கள்”
“அதன் பின் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இந்தியர் விளையாடிய மிகச் சிறந்த இன்னிங்ஸை நீங்கள் விளையாடினீர்கள். பாகிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பையில் 300க்கும் மேற்பட்ட ரன்களை சேசிங் செய்யும் போது நீங்கள் அடித்த 183 ரன்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியர்கள் விளையாடியதிலேயே நான் பார்த்த மிகவும் சிறந்த இன்னிங்ஸ்”
கெளதம் கம்பீர் பாராட்டு:
“அந்த வகையில் நீங்கள் நீண்ட தூரத்தை கடந்து வந்துள்ளீர்கள். அந்த ஸ்பெஷல் விஷயங்களால் நீங்கள் இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வது மிகவும் முக்கியம். இவற்றை செய்து நீங்கள் அடுத்த தலைமுறைக்கு உங்களுடைய மரபை விட்டு செல்கிறீர்கள். விராட் கோலி இப்போதும் உலகின் சிறந்த வீரராக இருப்பதற்கான பசியை கொண்டுள்ளார்”
இதையும் படிங்க: எந்த மாற்றமும் இல்லை.. சூரியகுமார் யாதவ் தான் அந்த தொடருக்கும் இந்திய அணியின் கேப்டன் – வெளியான தகவல்
“அடுத்ததாக ஆஸ்திரேலிய தொடர் வரவுள்ளது. அவர் ஆஸ்திரேலியாவில் விளையாடுவதை எப்போதும் விரும்புவார். விராட் கோலியைப் போன்ற வீரரை இந்தியா கொண்டிருப்பதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அடுத்த தலைமுறை வீரர்கள் அவரை பார்த்து வளர வேண்டும்” என்று கூறினார். அந்த வகையில் விராட் கோலி – கௌதம் கம்பீர் ஆகியோரிடையே மீண்டும் நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.



