பாண்டியாவை நம்ப முடியாது, இந்தியாவின் அடுத்த டி20 கேப்டனாக அவர் தான் சரியானவர் – இளம் வீரரை ஆதரிக்கும் கெளதம் கம்பீர்

Gambhir
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 15 வருடங்களாக 2வது கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் அசத்தினாலும் வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் சொதப்பி வெறும் கையுடன் வெளியேறியது. அந்த தொடரில் விராட் கோலி, சூரியகுமார் போன்ற சிலரை தவிர்த்து பெரும்பாலும் சுமாராக செயல்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து 2024 உலகக் கோப்பைக்கு முன் புதிய அணியை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் வலுவாக வைத்தனர்.

INDia Hardik pandya

- Advertisement -

அதற்கு செவி சாய்த்த பிசிசிஐ முதலாவதாக சேடன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவைக் கூண்டோடு நீக்கியது. அத்துடன் ஏற்கனவே நியூசிலாந்து டி20 தொடரில் அறிவிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா விரைவில் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்படுவார் என்றும் செய்திகள் வெளியாகி வருகிறது. அதற்கேற்றார் போல் அனுபவமில்லாத கேப்டன்சிப் பதவியில் 2022 ஐபிஎல் கோப்பையை குஜராத் அணிக்காக வென்று பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என 3 துறையிலும் அசத்தும் ஆல் ரவுண்டராக தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்துள்ள பாண்டியா தலைமையில் நடைபெற்று முடிந்த நியூசிலாந்து டி20 தொடரில் 1 – 0 (3) என்ற கணக்கில் இளம் அணி கோப்பையை வென்று அசத்தியது.

சரிப்பட்டு வராது:

இருப்பினும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக இருக்கும் ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயத்தை சந்திப்பவராக இருக்கிறார். சொல்லப்போனால் காயத்திலிருந்து குணமடைந்து வந்த பின் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை தவிர்த்துள்ள அவர் டி20 போட்டிகளிலும் முதன்மை பவுலர்கள் தடுமாறும் போது தேவைப்படும் சமயங்களில் மட்டுமே பந்து வீசுகிறார். அதனால் ஜஸ்பிரிட் பும்ரா போல உலகக்கோப்பைக்கு முன்பாக கடைசி நேரத்தில் அவர் வெளியேறினால் என்ன செய்ய முடியும் என்று இர்பான் பதான் போன்ற முன்னாள் வீரர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

shaw 1

இந்நிலையில் பாண்டியாவை விட 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்து இப்போதும் சயீத் முஷ்டாக் அலி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் டெல்லியின் கேப்டனாக செயல்பட்டு வரும் இளம் அதிரடி வீரர் பிரிதிவி ஷா டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் அடுத்த கேப்டனாக செயல்பட தகுதியானவர் என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஹர்டிக் பாண்டியா அடுத்த கேப்டனாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதனால் ரோகித் சர்மா துரதிஷ்டவசமான நிலைமையை சந்தித்துள்ளார். ஏனெனில் ஒரு ஐசிசி தொடரை வைத்து அவருடைய கேப்டன்ஷிப் திறமைகளை மதிப்பிடுவது நியாயமற்றதாகும்”

- Advertisement -

“இருப்பினும் நான் பிரிதிவி ஷா அடுத்த கேப்டனாக வருவதற்கு நான் தேர்வு செய்கிறேன். களத்திற்கு வெளியே அவரது நடத்தையில் நிறைய பேச்சுக்கள் இருப்பது எனக்கு தெரியும். ஆனால் அது தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர்களின் வேலையாகும். ஏனெனில் 15 கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வது மட்டும் தேர்வுக் குழுவின் வேலையல்ல. அனைவரையும் சரியான பாதையில் நடக்க வைப்பதும் அவர்களின் வேலையாகும். மேலும் பிரிதிவி ஷா மிகவும் ஆக்ரோஷமாக வெற்றிகரமாக கேப்டன்ஷிப் செய்வார் என்று எனக்கு தோன்றுகிறது. ஏனெனில் சாதாரணமாக இந்த விளையாட்டில் அவர் விளையாடும் விதத்திலேயே அவருடைய ஆக்ரோஷமான குணம் வெளிப்படுகிறது” என்று கூறினார்.

Gambhir

அதாவது முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் போல சரவெடியான செய்யும் பேட்டிங்கை போலவே கேப்டனாகவும் பிரிதிவி ஷா ஆக்ரோசமாக செயல்பட்டு இந்தியாவை வெற்றிப் பாதையில் நடக்க வைப்பார் என்பதால் டி20 கிரிக்கெட்டில் அவர் கேப்டனாக செயல்பட தகுதியானவர் என்று கௌதம் கம்பீர் ஆதரவு கொடுத்துள்ளார். இருப்பினும் ரோஹித் சர்மாவுக்கு பின் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரை அடுத்த தலைமுறை கேப்டனாக உருவாக்க பிசிசிஐ நினைக்கிறது. ஆனால் அண்டர்-19 உலக கோப்பையைவென்ற அனுபவம் நிறைந்த பிரிதிவி ஷா அவர்களை விட கேப்டன்ஷிப் செய்ய சிறந்தவராகவே காட்சியளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement