260 டூ 120 இதான் எங்க பயமற்ற ரூட்.. இந்த துபே போதுமா? அபிஷேக் அடிச்சது பெஸ்ட்.. இங்கிலாந்துக்கு கம்பீர் பதிலடி

Gautam Gambhir
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. அதனால் தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்த இந்தியா உலகச் சாம்பியன் என்பதையும் காண்பித்துள்ளது. முன்னதாக இந்தத் தொடரின் நான்காவது போட்டியில் ஆல் ரவுண்டர் துபேவுக்கு பதிலாக பவுலர் ராணாவை சப்ஸ்டிடியூட் வீரராக இந்தியா பயன்படுத்தியது சர்ச்சையை உண்டாக்கியது.

விதிமுறைப்படி அது ஏற்றுக்கொள்ள முடியாதது என ஜோஸ் பட்லர் முதல் கெவின் பீட்டர்சன் வரை விமர்சித்தார்கள். அந்த சூழ்நிலையில் கடைசி போட்டியில் முழுமையாக பவுலிங் செய்த துபே 2 ஓவரில் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். எனவே அவரால் 4 ஓவர்கள் வீச முடியும் என்று இங்கிலாந்து அணிக்கு பயிற்சி பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மறைமுக பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

இந்தியாவின் ரூட்:

மேலும் 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய பவுலர்கள் நிறைந்த இங்கிலாந்துக்கு எதிராக அபிஷேக் சர்மா அடித்தது சிறந்த சதம் என்றும் அவர் பாராட்டியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் அணுகுமுறை பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து மிகவும் உயர்தரமான அணி. நாங்கள் தோல்விக்காக பயப்பட விரும்பவில்லை. 250 – 260 ரன்கள் அடிக்க விரும்பும் நாங்கள் சில நேரங்களில் 120க்கு அவுட்டாகக் கூடும்”

“ஆனால் நாங்கள் சரியான வழியிலேயே இருக்கிறோம். இப்படி பயமற்ற கிரிக்கெட்டை விளையாடும் வழியில் நாங்கள் முன்னோக்கி இருக்கிறோம். அபிஷேக் ஷர்மா போன்ற வீரர்களுக்கு நாங்கள் பொறுமையுடன் ஆதரவு கொடுப்பது முக்கியம். எங்கள் அணியில் இருக்கும் பெரும்பாலான வீரர்கள் பயமற்ற கிரிக்கெட்டை விளையாடும் ஐடியாலஜியை நம்புகிறார்கள்”

- Advertisement -

பயமற்ற இந்தியா:

“140 – 150 கி.மீ வேகத்தில் தொடர்ச்சியாக வீசக்கூடிய பவுலர்கள் இருக்கும் அணிக்கு எதிராக அபிஷேக் அடித்தது போன்ற சிறந்த சதத்தை நான் பார்த்ததில்லை. இந்த பையன்கள் அனைவரும் நிறைய கிரிக்கெட்டை ஒருவருக்கொருவர் எதிராக விளையாடியுள்ளார்கள். அதுவே இந்திய கிரிக்கெட்டாகும். வெற்றிகள் உங்கள் பக்கம் வரும் போது அனைத்தும் நன்றாக செல்லும்”

இதையும் படிங்க: இதுதான் எங்களோட ஸ்டைல்.. இனிமேல் இப்படித்தான் ஆடுவோம்.. வெற்றிக்கு பின்னர் – சூரியகுமார் யாதவ்

“140 – 150 கோடி இந்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்துதல் என்றால் என்ன என்பதை எங்கள் வீரர்கள் அறிவார்கள். பிஸ்னோய், வருண் போன்ற பவுலர்களை கொண்டிருப்பது மிகவும் முக்கியம். பேட்டிங்கில் நாங்கள் முடிந்தளவுக்கு கடினமாக முயற்சிக்கிறோம். அவை அனைத்தும் டாப் 7 பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவதைப் பற்றியதாகும். இன்று துபே 4 ஓவர்களை வீசியிருப்பார். துவக்க வீரர்களை தவிர்த்து பேட்டிங்கில் எங்கள் அணியில் நிலையான இடம் இல்லை. அடுத்த ஒருநாள் தொடரிலும் நாங்கள் அதிரடியான கிரிக்கெட்டை விளையாடி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைக்க விரும்புகிறோம்” எனக் கூறினார்.

Advertisement